ஆளுமை:சிவதாரணி, சகாதேவன்

From நூலகம்
Name சிவதாரணி
Birth
Place நல்லூர்,யாழ்ப்பாணம்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவதாரணி, சகாதேவன் யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த கலைஞர். 1983ஆம் ஆண்டு தொடக்கம் இலண்டனில் வசித்து வருகிறார். இலண்டனில் வாத்திய இசையில் பல மாணவர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். சிறு வயதிலேயே வீணை இசையினை ஆறுமுகம்பிள்ளையிடம் பயின்று தமிழ்நாடு அரச இசைக் கல்லூரியில் கலைமாமணி கே.பி.சிவானந்தம், கலைமாமணி திருமதி கற்பகம், கலைமாமணி சுவாமிநாதன் ஆகியோரிடம் வீணை இசையை முறையாக கற்று சங்கீதவித்துவான் பட்டத்தைப் பெற்றார்.

யாழ் கல்வித் திணைக்களத்தில் சங்கீத விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார். இலண்டனில் வீணாலயா என்ற நிறுவுனத்தை உருவாக்கி இசை வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறார். 40க்கும் மேற்பட்ட வீணை அரங்கேற்றறங்களை செய்திருக்கின்றார்.வீணையில் புதிய புதிய உத்திகளைக் கையாண்டு மரபும் புதுமையும் இணைந்த உயர்தர இசை நுட்பங்களை கூட்டுவாத்திய இசை மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.


விருதுகள்

வீணாநாதசுடர் - 2015ஆம் ஆண்டு சர்வதேச இந்து இளைஞர் பேரவை.

The National Indian Art Awards லண்டன் Milapfest நிறுவனத்தினால் சங்கீத ஆச்சாரிய ரட்ண விருது.