ஆளுமை:சிவஞானம், சின்னத்துரை

From நூலகம்
Name சிவஞானம்
Pages சின்னத்துரை
Pages யோகம்மா
Birth 1938.03.11
Pages 2016.05.25
Place கிளிநொச்சி
Category சமூக ஆர்வலர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவஞானம், சின்னத்துரை (1938.03.11 - 2016.05.25) அல்லப்பிட்டி 2 ஆம் வட்டாரத்தினை பிறப்பிடமாகக் கொண்ட நாட்டுக்கூத்து கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை; தாய் யோகம்மா. இவர் ஆரம்ப கல்வியை அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் கற்றார். இடை நிலைக் கல்வியை மண்டைதீவு மகா வித்தியாலயத்தில் கற்றார்.

இவர் சமூகப்பணிகளிலும் , கலாச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபாடு கொண்டவர். அனைவருடனும் பண்புடன் பழகும் குணம் கொண்டவர். இவர் கற்ற கல்விக்கும் செயற்பாட்டிற்கும் தொடர்பற்று இருப்பது போல் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபட தொடங்கினார். அவர் 1966 ஆம் ஆண்டு முதல் கிளி வட்டக்கச்சி ஆறுமுகம் வீதியைச் சார்ந்த, கண்ணன் கோவிலுக்கு அருகாமையில் அவரது இல்லம் அமைந்தது. வட்டக்கச்சி குடியேறியதும் விவசாயத்தில் நாட்டம் ஏற்பட்டு பின் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இவரது 28 ஆவது வயதில் வட்டக்கச்சியில் வசித்து வந்தவர்களான கந்தையா கதிராச்சிப்பிள்ளையார் தம்பதியினரின் மகள் இலட்சுமியை 1966ஆம் ஆண்டு மணம் முடித்தார்.

இவர் வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளராகவும் இருந்தார். மாயவனூர் ஐக்கிய நாணய சங்க தலைவராகவும், வட்டக்கச்சி ரங்கநாத பெருங்கோயில் அறங்காவலராகவும் செயற்பட்டார். அத்தோடு பல்வேறு சமூகப்பணிகளிலும் ஆர்வத்தோடு செயற்பட்டார்.