"ஆளுமை:சிவசுப்பிரமணியம், செல்லையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சிவசுப்பிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

00:34, 8 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சிவசுப்பிரமணியம்
தந்தை செல்லையா
தாய் சின்னாச்சிப்பிள்ளை
பிறப்பு 1915.02.24
இறப்பு 1999.11.04
ஊர் விழிசிட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சிவசுப்பிரமணியம், செல்லையா (1915.02.24 - 1999.11.04) யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, விழிசிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்லையா; தாய் சின்னாச்சிப்பிள்ளை. விழிசிட்டி தமிழ் கலவன் பாடசாலையில் (தற்போதைய சேர். கனகசபை வித்தியாசாலை) பண்டிதர் சி. கதிரிப்பிள்ளை அவர்களிடமே இவர் ஆரம்பக் கல்வியைக் கற்றார். தொடர்ந்து அளவெட்டி வடக்கு சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்தில் கல்வி கற்றார். 1930ஆம் ஆண்டு கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சிக்காக சேர்ந்து 1932ஆம் ஆண்டில் தனது பதினேழாவது வயதில் பயிற்றப்பட தமிழ் ஆசிரியரானார்.

கொல்லங்கலட்டி சைவ வித்தியாசாலை, தெல்லிப்பளை கிழக்கு சைவப்பிரகாச வித்தியாசாலை, தெல்லிப்பளை கிழக்கு சைவப்பிரகாச வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராக இவர் கடமையாற்றியுள்ளதோடு பயிற்றப்பட்ட தமிழாசிரியர் தராதரப் பத்திரத்தையும் சித்திர பாடத்திற்குரிய தராதரப் பத்திரத்தையும் சங்கீத ஆசிரியர் தராதரப் பத்திரத்தையும் இவர் பெற்றுள்ளார். பல நூல்களை எழுதியுள்ள இவர் 1980ஆம் ஆண்டில் நகுலகிரிப் புராணத்திற்கு உரை எழுதியுள்ளார். மேலும் 1988இல் நகுலேஸ்வரர் பத்திரசக் கீர்த்தனைகள் எனும் நூலை பதிப்பித்து வெளியிட்டுள்ளார். சிறுவர் பாடசாலையைய நடத்திக் கொண்டிருந்த இவர் குழந்தைகளுக்கான கவிதைகள் பலவற்றை விழிசைச் சிவம் என்ற புனைபெயருடன் பத்திரிகைகளில் எழுதி வந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 154171 பக்கங்கள் 255-267