ஆளுமை:சிறிசெல்வம், அடைக்கலம்

From நூலகம்
Name சிறிசெல்வம்
Pages அடைக்கலம்
Pages குமாரிப்பிள்ளை

பிறப்பு = 1965. 06 .29

Birth {{{பிறப்பு}}}
Pages -
Place சாலையூர், மூதூர்,திருகோணமலை
Category சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.



அடைக்கலம் சிறிசெல்வம் (1965.06.29) இவர் திருகோணமலை மாவட்டத்தின் முதூர் பிரதேசத்திற்கு உட்பட்ட சாலையூர் எனும் வேடர் தொல் கிராமத்தினை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேடமரபில் வந்த சமூகசேவையாளர். இவரது தந்தை அடைக்கலம்;குமாரிப்பிள்ளை. இவரது மனைவி ஜெயசிறி. இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். தனது ஆரம்ப காலக் கல்வியை சேனையூர் மகா வித்தியாலயத்தில் கற்றுள்ளார். தனது சிறுவயது முதலே அக்கால போராட்ட வன்முறைகளின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இவர் பல அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டு சமூக நடத்தைகள், தேசியம், வர்க்கம் எனும் கருத்தியல்கள் சார்ந்த தெளிவுடன் செயற்படுபவராகக் காணப்படுகின்றார். அவ்வகையில் ‘குவேனி பழங்குடிகள் நலன்புரி அமைப்பு’ எனும் தனது சமூகம் சார்ந்த அமைப்பில் பொருளாளராகவும் காணப்படுகின்றார். இன்றும் சமூகத்தின் மத்தியில் காணப்படும் வேடர் சார்ந்த எண்ணப்பாடுகளையும், வேடருக்கெதிரான உரிமை மீறல்களையும் களையும் நோக்குடன் செயற்படும் ஒரு புத்திஜீவியாகவும் காணப்படுகின்றார்.