ஆளுமை:சின்னத்தம்பி, தாமோதரம்பிள்ளை

From நூலகம்
Name சின்னத்தம்பி
Pages தாமோதரம்பிள்ளை
Birth 1830.04.04
Pages 1878
Place உடுப்பிட்டி
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னத்தம்பி, தாமோதரம்பிள்ளை (1830.04. 04 - 1878) யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை தாமோதரம்பிள்ளை. இவர் தியாகராச பண்டிதரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றதோடு கணிதம், சோதிட சாஸ்திரங்களில் மிகுந்த அறிவும் பயிற்சியும் உடையவரான இவர் தமது ஊரிலே ஒரு தமிழ்ப் பாடசாலையை நிறுவி அரசினர் உதவிப் பணம் பெறாது தாமும் அப்பாடசாலையில் ஆசிரியராக இருந்து கொண்டு அதனைச் செம்மையான முறையில் நடாத்தி வந்தார்.

இவர் வீரபத்திரர் சதகம், வீரபத்திரர் பதிகம், வீரபத்திரர் ஊஞ்சல், புதுச்சந்நிதி முருகன் பதிகம், விக்னேஸ்வரர் பதிகம், வீரமாகாளியம்மன் பதிகம், சிவதோத்திர கீர்த்தனை, மதனவல்லி விலாசம், இராமவிலாசம், நிலஅளவைச் சூத்திரம், சோதிட சுருக்கம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.


Resources

  • நூலக எண்: 100 பக்கங்கள் 180
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 215-216
  • நூலக எண்: 963 பக்கங்கள் 121