ஆளுமை:சித்ரா, நாகநாதன்

From நூலகம்
Name சித்ரா
Birth
Place
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சித்ரா, நாகநாதன் ஓர் எழுத்தாளர். 1980களில் தாகம் கலை - இலக்கியக் காலாண்டிதழின் மூலம் பரவலாக அறியப்பட்டவர். இவரது முதற் சிறுகதைத் தொகுதி கிராமத்து மண்கள் சிவக்கின்றன என்ற தலைப்பில் தாகம் வெளியீடாக 1990 இல் வெளிவந்தது. கிழக்கிலங்கையில் இந்திய அமைதிப் படையின் காலகட்டத்தில் நடந்தேறிய சோக நாடகங்களை அப்படியே தனது சிறுகதையில் இவர் வெளிப்படுத்தியுள்ளதோடு பெண்ணியக் கருத்துக்களை வைத்தும் சிறுகதைகள் படைத்துள்ளார்.

இவரது சிறுகதைகளாக ஒரு போராளியின் காதலி காத்திருக்கிறாள், பெற்றமனம், அடம்பன் கொடியும் புத்தாண்டு வெடியும், மனிதம் இன்னும் மரணிக்கவில்லை, வேதனையின் சுவடுகள், கிராமத்து மண்கள் சிவக்கின்றன, தலைமுறைகள் முதலியன குறிப்பிடத்தக்கன.

வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 10174 பக்கங்கள் 32