ஆளுமை:சித்தி பரீதா, தம்பி சாஹிப்

From நூலகம்
Name சித்தி பரீதா
Birth
Place புத்தளம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சித்தி பரீதா, தம்பி சாஹிப் புத்தளம் சிலாபத்தைச் பிறந்த எழுத்தாளர். ஆரம்பக் கல்வியை சிலாபம் ரோமன் கத்தோலிக்க தமிழ்ப் பெண்கள் பாடசாலையிலும் ஐந்தாம் தரம் முதல் 8ஆம் தரம் வரை சிலாபம் நஸ்ரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் கற்றார். சிறுவயதிலேயே எழுத்துத்துறையில் பிரவேசிப்பதற்கு ஆர்வம் இருந்தாலும் திருமண பந்தத்தில் இணைந்ததன் காரணமாக எழுதுவதை இடைநிறுத்தினார். இவரின் நண்பி திருமதி தெய்வபலம் இராமச்சந்திரன் அவர்களின் ஊக்கம் காரணமாக சித்தி பரீதா தனது 63ஆவது வயதில் எழுத்துத்துறைக்குள் பிரவேசித்துள்ளார். குர்ஆனின் சுருக்கத்தின் கண்ணோட்டம் என்ற இவரது முதலாவது கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் 2012ஆம் ஆண்டு பிரசுரமானது. அதனைத் தொடர்ந்து இவரின் பல இஸ்லாமிய கட்டுரைகள் தினகரன் பத்திரிகையிலும் பிரசுரமாகின. இவ்வாறு பத்திரிகையில் வெளியான கட்டுரைகளைத் தொகுத்து இஸ்லாமிய தத்துவ முத்துக்கள் என்ற பெயரிலும் தித்திக்கும் திருமுறையின் மகிமைகள் என்ற பெயரிலும் இவர் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார்.

படைப்புகள்

  • குர்ஆனின் சுருக்கத்தின் கண்ணோட்டம்
  • இஸ்லாமிய தத்துவ முத்துக்கள்