ஆளுமை:சித்தி கைறுன் நிஸா, அப்துல் மஜிட்

From நூலகம்
Name சித்தி கைறுன் நிஸா
Pages அப்துல் மஜீட்
Birth 1964-06.01
Pages 2020.11.23
Place சாய்ந்தமருது
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சித்தி கைறுன் நிஸா, அப்துல் மஜிட் (1964-06.01 - 2020.11.23) சாய்ந்தமருதை சேர்ந்த ஒரு எழுத்தாளர் ஆவார். இவரது தந்தையின் பெயர் அப்துல் மஜீத். இவர் கலைமகள் ஹிதாயா மஜீட் , கலைமகள் ஹிதாயா றிஸ்வி என்ற பெயர்களில் , சர்வதேச ரீதியில் இலக்கியத் துறையில் புகழ் பெற்றவர் .

நாடறிந்த ஒரு கவிதாயினியான இவர் 1985 - 2000 ம் ஆண்டுவரை தடாகம் என்ற இலக்கிய சஞ்சிகையை தொடர்ச்சியாக வெளியிட்டவர் அதனூடாக பல இளம் கவிஞர்களுக்கு கவிதைக்கான களம் அமைத்துக் கொடுத்தார். 1991 ல் ' நாளையும் வரும் என்ற புதுக் கவிதைத் தொகுதியையும், 2000 ம் ஆண்டு 'தேன் மலர்கள்' என்ற கவிதைத் தொகுதியையும், 'இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை' என்ற கவிதைத் தொகுதியை இன்னும் ஒருவருடன் சேர்ந்தும் வெளியிட்ட இவர் பத்திரிகை , வானொலி என்று இலக்கியத் துறையில் முன்னிலை வகித்தார் .

தடாகம் கலை இலக்கிய வட்டம் என்ற இலக்கிய அமைப்பினூடாக இணையத்தளத்தின் மூலம் சர்வதேச ரீதியாக கவிஞர்களிடையே கவிதைப் போட்டிகளை நடாத்தி கவித்துவத்தை வளர்த்து வந்தார். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் என்று பல நாடுகளிலும் பல கவிதை நிகழ்வுகளில் கலந்துகொண்டவர். தனது அமைப்பினூடாக பலரின் கவிதை நூல்களை வெளியீடு செய்த ஒருவர். இளம் படைப்பாளி , தேசமான்ய, இரத்தினதீபம், பாவரசு என்ற விருதுகளையும் காவியத் திலகம், கலை மாமணி என்ற சர்வதேச விருதுகளுடன் இன்னும் பல விருதுகளையும் பெற்ற இவர் 23.11.2020 ம் திகதி காலமானார்