ஆளுமை:சாந்தி, ரமேஸ்

From நூலகம்
Name சாந்தி
Birth 1974.06.16
Place குப்பிளான்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாந்தி, ரமேஸ் (1974.06.16) யாழ்ப்பாணம் குப்பிளானில் பிறந்த எழுத்தாளர். தற்பொழுது ஜேர்மனியில் வசிக்கின்றார். இவரது தந்தை நேசக்கரம். தனது 13ஆவது வயதில் எழுத்துலகில் பிரவேசித்துள்ளார். கவிதை, சிறுகதை, நாவல் எழுதுவதென பன்முகத்திறமைகளைக் கொண்டவர். வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு நேசக்கரம் என்ற அமைப்பை உருவாக்கி கல்வி, சுயதொழில் ஊக்குவிப்பு, வாழ்வாதார முயற்சிக்கான ஆதரவு, அனர்த்த உதவிகள், முதலுதவிச் சிகிச்சைகள் போன்றவற்றை செய்து வருகிறார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம், ஐரோப்பிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (சங்கமம்) ஆகியவற்றிலும் வேறும் சில இணையத்தள ஊடகங்களிலும் இணைந்து பணியாற்றி வருகிறார்.


படைப்புகள்

  • இன்னொருகாத்திருப்பு (கவிதைத்தொகுப்பு-2000)
  • அழியாத ஞாபகங்கள் (கவிதைத்தொகுப்பு 2001)
  • கலையாத நினைவுகள் (சிறுகதைத்தொகுப்பு 2002)
  • உயிர்வாசம் (கவிதைத்தொகுப்பு 2005)
  • கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச்சொட்டு (கவிதைத்தொகுப்பு 2012)
  • உயிரணை (நாவல் 2016)


வெளி இணைப்புக்கள்