ஆளுமை:சரவணன், கதிரன்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:54, 26 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சரவணன்
தந்தை கதிரன்
பிறப்பு 1947.09.09
ஊர் தெல்லிப்பளை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரவணன், கதிரன் (1947.09.09 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும் கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட இசை- நாடகக் கலைஞர். இவரது தந்தை கதிரன். இக்கலைஞர் நாடகங்களை எழுதும் ஆசிரியராகவும் நட்டுவாங்கம் செய்யும் அண்ணாவியாராகவும் விளங்கியுள்ளார்.

இவரால் மேடையேற்றப்பட்ட சத்தியவான் சாவித்திரி இசை நாடகம் பலராலும் பாராட்டப்பட்டது. இவர் நடிகமணி வி. வி. வைரமுத்துவின் இசை நாடகங்களில் சிறு வேடமேற்று நடித்துள்ளதோடு, இராஜபாட் நகைச்சுவை வேடங்களில் நடித்துப் புகழ் பெற்றவராக விளங்கினார்.

பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக் கழகத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவின் போது மூத்த கலைஞர்கள் வரிசையில் இவர் மகுடம் சூட்டி மரபுக்கலைச்சுடர் என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மேலும் நகைச்சுவை மன்னன், நவரசத்திலகம் ஆகிய பட்டங்களைக் கலைப்பணிக்காகப் பெற்றிருக்கின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 171
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சரவணன்,_கதிரன்&oldid=195102" இருந்து மீள்விக்கப்பட்டது