ஆளுமை:சம்சுனா, ஆதம்பாவா

From நூலகம்
Name சம்சுனா
Birth 1980.07.12
Place சம்மாந்துறை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சம்சுனா, ஆதம்பாவா அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் பிறந்த எழுத்தாளர். கல்வியை சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் கற்றார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே பாடல் இயற்றும் திறமை கொண்டவராகக் காணப்பட்டார் சம்சுனா. தேசிய இளைஞர் கழகத்தின் ஊடாக மாவட்ட மட்டத்தில் பாடல் எழுதியதன் ஊடாக தேசிய மட்டத்தில் பாடல் எழுதும் சந்தர்ப்பம் கிடைத்தது. தேசிய மட்ட சந்தர்ப்பத்தை நழுவவிட்டாலும் சம்சுனா கவிதை, விவாதம், அறிவிப்பு, வில்லுப்பாட்டு, நாடகம் போன்ற பல்துறைகளிலும் ஈடுபாடுடையவர்.

”மாப்பிள்ளைச் சந்தை” என்ற நாடகத்தை தயாரித்து சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலய இலக்கிய மன்றத்தில் அரங்கேற்றினார். ”மாறியது நெஞ்சம்”, ”வரிக்கொள்ளை” போன்ற நாடகங்கள் தயாரிக்கப்பட்டு போட்டி நிகழ்ச்சிகளில் அரங்கேற்றப்பட்டது. சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தின் ”அறுவடை” நூலின் நூலாசியராகவும் அதில் வரவேற்பு கீத பாடலாசிரியராகவும் இவர் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியும் பாடியும் உள்ளார்.

மாணவர்களின் கற்றலுக்காக இலக்கிய இதயங்கள், பதமும் பொருளும் நூலை வெளியிட்டுளளார். உன் பெயர் குறிக்கும் எழுத்துக்களில் கவிதை தொகுப்பை 2012ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.