ஆளுமை:சபாபதிப்பிள்ளை, பெரியதம்பி

From நூலகம்
Name சபாபதிப்பிள்ளை
Pages பெரியதம்பி
Birth 1885
Pages 1964
Place அரியாலை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சபாபதிப்பிள்ளை, பெரியதம்பி (1885 - 1964) யாழ்ப்பாணம், அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இசைக் கலைஞர், நாடகக் கலைஞர். இவரது தந்தை பெரியதம்பி. இவர் 1940களில் அறிமுகமான சங்கீத இசைக்கூத்துக்களை அரியாலை மண்ணில் மட்டுமல்லாது வெளிநாடு சென்றும் ஆற்றுகைப்படுத்தினார். இச்சங்கீத இசைக்கூத்தே நவீனமயப்படுத்தப்பட்டு இசை நாடகம் என்னும் பெயரைப் பெற்றது.

இவரது பனை ராசன் என்னும் கற்பனைச் சரித்திர இசை நாடகம் இவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது. இவ் இசை நாடகம் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் முதன் முதலில் மேடையேறியது. அரியாலைச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை இணைத்து அல்லி அர்ச்சுனா, அனுமார்கதை, வள்ளி திருமணம் ஆகிய சங்கீதக் கூத்துக்களையும் இவர் மேடையேற்றியிருந்தார்.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 150
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 157