ஆளுமை:சந்திரா, தியாகராஜா

From நூலகம்
Name சந்திரா தியாகராஜா (திருமதி.சந்திரா இரவீந்திரன்)
Pages தியாகராஜா
Pages சிவகாமசுந்தரி
Birth 03-09-1963
Place ஆத்தியடி, பருத்தித்துறை, இலங்கை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரா, தியாகராஜா எழுத்தாளர். 1981இல் ”ஒரு கல் விக்கிரகமாகிறது” என்ற முதற் சிறுகதை மூலம் சிறுகதைத் துறைக்குள் பிரவேசித்த இவர், ஈழத்துப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் பலவற்றிலும் எழுதியுள்ளார்.


இவர் சில நேரங்களில் சில நியதிகள், மடமையைக் கொளுத்துவோம், எரியும் தளிர்கள், தரிசு நிலத்து அரும்பு போன்ற பல சிறுகதைகளையும் நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள் என்ற குறுநாவலையும் நிழல்கள் என்ற சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளார்.


1986இல் யாழ் இலக்கிய வட்டமும், ஈழமுரசும் இணைந்து நடாத்திய "இரசிகமணி நினைவுக் குறுநாவல்" போட்டியில் இவரது "நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள்" இரண்டாவது பரிசினைப் பெற்றுக் கொண்டதுடன், அதே ஆண்டில் "ஈழமுரசு" பத்திரிகையில் தொடராக வெளிவந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இவரது குறிப்பிடத்தக்க சிறுகதைகள் 2011ம் ஆண்டில் 'நிலவுக்குத் தெரியும்' என்ற சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் பார்க்கவும்


Resources

  • நூலக எண்: 10174 பக்கங்கள் 32