ஆளுமை:சந்தியா அஞ்சலினா, சிங்கராசா

From நூலகம்
Name சந்தியா அஞ்சலினா
Pages சிங்கராசா
Pages மரியை மத்தினா
Birth 1943.12.16
Place கிளிநொச்சி, இரணைமடு
Category கூத்துக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ந்தியா அஞ்சலினா (1943.12.16 - ) கிளிநொச்சி, இரணைமடுவைச் சேந்ர்ந்த கூத்துக் கலைஞர். இவரது தந்தை சிங்கராசா; தாய் மரியை மத்தினா. இவர் ஆரம்பக்கல்வியை இரணைதீவு றோ க த க பாடசாலையில் கற்று ஆண்டு 6 படிப்பினை தொடர்வதற்கு யாழ்ப்பாணம் இளவாலை கன்னியர் மடத்தில் இணைக்கப்பட்டார். பாடசாலை கல்வி முடிந்ததும் 1959ஆம் ஆண்டு சூசை சந்தியா அவர்களை திருமணம் செய்தார். கணவருடைய நாடகங்களிலும் மேடையேற்றம்களிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.

1961ஆம் ஆண்டு வரப்பிரசாதம் நாடகத்தினை புத்தகத்திலிருந்து கொப்பிக்கு எழுதிக்கொடுத்தார். நாடகப் பாத்திரங்களை கலைஞர்களுக்கு கொடுக்கும் போது அவர்களுடைய பாத்திரத்திற்காக பாட்டுகளையும் எழுதிக் கொடுக்கும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.பாத்திரங்களை எழுதிக் கொடுப்பதும் கணவர் நாடகம் பழக்கும் போது கொப்பி பார்ப்பதும் மெட்டுகளை எடுத்துக் கொடுப்பதும் நான் தான் என்று பெருமையுடன் கூறுகின்றார்.

2013ஆம் ஆண்டு இவருடைய கணவர் சூசை சந்தியா அவர்களை சந்தித்தபோது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அதிகமான பதில் சொன்னவர் இவர்தான் நாடகங்களின் நுட்பங்களையும் அரங்கேற்ற முறைமைகளையும் பாத்திரங்களின் பாடல்களையும் ஆழமாய் அறிந்து இருந்தமை புலனாகியது.

2014.09.01 அன்று மீண்டும் இரணைதீவில் கலைஞர்களை சந்தித்து அவர்களுடைய கிராமத்து கூத்துக் கலைஞர்கள் தொடர்பான ஆய்வினை மேற்கொள்வதற்கு இரனமாநகருக்கு சென்றிருந்தபோது கலைஞர்கள் பலர் வருகை தந்திருந்தார்கள். நாடக வரலாறுகளையும் அன்னாவியரின் செயற்பாடுகளையும் பகிர்ந்து கொண்டிருந்தவர்கள் ஒரு கட்டத்தில் ஞானசவுந்தரி நாடகத்தில் ஒரு பாட்டை படிக்கத் தொடங்கினார்கள் அற்புதமாக இருந்தது அப்பொழுது அஞ்சலின் அம்மா கிட்ட உஷாரா படிங்கடா என்றார் சிறிது நேரத்தில் பாடி கொண்டிருந்தவர்கள் பார்த்து பாட்டுக்கு கருத்து விளங்கும்படி தெளிவாய்ப் படியன் என்றார் எந்த அளவிற்கு இவர் கூத்துக்கலையில் ஊறியுள்ளாரென்பது நிரூபனமானது.