"ஆளுமை:சத்தியானந்தி, நமசிவாயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சத்தியானந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

05:40, 19 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

பெயர் சத்தியானந்தி
தந்தை துரைரத்தினம்
பிறப்பு 1974.04.14
ஊர் திருகோணமலை
வகை பெண்ஆளுமைகள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சத்தியானந்தி, நமசிவாயம் (1974.04.14) திருகோணமலை கந்தளாயில் பிறந்த பெண் ஆளுமை. ஆரம்பக்கல்வியை தி கடுக்காமுனைஅரசினர் தமிழ்கலவன்பாடசாலையிலும், திஈச்சிலம்பற்றை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, மட்கொம்மாதுறை விநாயகர்வித்தியாலயம், தி/பேராறுகந்தளாய் பரமேஸ்வரா வித்தியாலயம், மட்/செங்கலடி மத்தியகல்லூரி, உயர்கல்வியை மட்/ இந்துக்கல்லூரியிலும் கற்றார். இவரின் தந்தையின் இடமாற்றங்களே இவர் பல பாடசாலைகளில் கற்க நேரிட்டது. கிழக்குப்பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபீடத்தில் கற்று பட்டம்பெற்றார். சட்டமாணிக் கற்கையையும் முதுமாணிக் கற்கையையும் கற்றுள்ளார்.

1992ஆம் ஆண்டு மட்கொம்மா துறை விநாயகர் வித்தியாலயத்தில் ஆசிரியராகப்பணியை ஆரம்பித்ததுடன் மட்/தவளாய் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் சேவையாற்றினார். 2003ஆம் ஆண்டு இலங்கை நிர்வாகசேவையில் இணைந்து கொண்டு நிர்வாக சேவைப் பயிற்சியை முடித்து வடக்குகிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவில் உதவிச் செயலாளராக பதவிவகித்துள்ளார். இரண்டு ஆண்டுகள் திருகோணமலையில் பணிபுரிந்து 2006ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளராக பதவியேற்றார். மட்டக்களப்பில் இவரது நிர்வாகக் காலப்பகுதியில் உள்ளுராட்சித்துறை குறிப்பிடத்தக்க அளவு மாற்றத்திற்கு உட்பட்டது. சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புக்களின் மீள் கட்டுமானப் பணிகளும், யுத்த சூழலால் ஏற்பட்ட இடப் பெயர்வின் மீள்குடியேற்றம், கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற உள்ளுராட்சி, மாகாணசபைத் தேர்தல்களின் மூலம் உருவான மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சிமுறைகளின் பரிமாணங்கள் எனும் தொடரான மூன்று சவால்களுக்கும் முகம் கொடுத்து உள்ளுராட்சி சேவையாக மாற்றிய மாற்றத்தின் பின்னணியில் இவர் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 8312 பக்கங்கள் 6-8