ஆளுமை:சண்முகநாதன், பாலகிருஷ்ணசாமி

From நூலகம்
Name சண்முகநாதன்
Pages பாலகிருஷ்ணசாமி
Pages சின்னம்மா
Birth 1922
Pages 1986
Place வேலணை
Category கலைஞன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகநாதன், பாலகிருஷ்ணசாமி (1922- 1986) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓவியர். இவரது தந்தை பாலகிருஷ்ணசாமி, இவரது தாய் சின்னம்மா. இவர் சிறுவயது முதல் சிற்பங்களை ஆக்குவதிலும் சித்திரம் வரைதலிலும் கைதேர்ந்தவராக விளங்கினார். அக்காலத்து யாழ்ப்பாணத் திரையரங்குகளின் திரைப்பட விளம்பர ஓவியராகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

நாதன் என்னும் புனைபெயரால் அறியப்படும் இவர், புகைப்படத்துறையில் ஆர்வம் கொண்டு இந்தியாவில் புகைப்படத்துறையில் சிறந்து விளங்கிய வீ. மெய்ப்பச் செட்டியாரின் ஏ. வீ .எம் கலையகத்தில் புகைப்படக் கலையினை பயின்றதோடு நாடு திரும்பியதும் யாழ் மண்ணில் நாதன் Studio புகைப்படக் கலையகத்தை நிறுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் அரசியலில் ஈடுபாடு கொண்டு 1956 ஆம் ஆண்டு இடம்பெற்ற சத்தியாக்கிரக போராட்டத்திலும் ஶ்ரீ எதிர்ப்புப் போராட்டத்திலும் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 397-399