ஆளுமை:குரூஸ், ஆரோக்கியம்

From நூலகம்
Name குரூஸ்
Birth
Place மன்னார், வங்காலை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குரூஸ், ஆரோக்கியம் மன்னார், 10ஆம் வட்டாரம் வங்காலையைச் சேர்ந்த கலைஞர். மன்னார் ஆரம்ப இடைநிலைக் கல்வியை புனித மத்திய மகாவித்தியாலயத்திலும் உயர்தரக் கல்வியை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசியக் கல்லூரியிலும் கற்றார். 1981ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் சிறப்பு பட்டதாரி பட்டம் பெற்றார். 199ஆம் ஆண்டு கல்வியியல் பட்டப்பின் டிப்ளோமா கொழும்புப் பல்கலைக்கழத்திலும், 2006ஆம் ஆண்டு கல்வியியல் முதுமானி பட்டத்தை யாழ் பல்கலைக்கழகத்திலும், 2008ஆம் ஆண்டு கல்வி முகாமைத்துவ டிப்ளோமாவினை தேசிய கல்வி நிறுவகத்திலும் நிறைவு செய்துள்ளார்.

ஆசிரியராக தொழிலை ஆரம்பித்த இவர் சமூககல்வி ஆசிரிய ஆலோசகராகவும் மன்னார் வலயக் கல்விப்பமனையிலும், மன்னார் கோட்டக் கல்வி அதிகாரியாகவும் பிரதிக் கல்விப் பணிப்பாளர், மடு கல்விப் பணிமனையிலும், தமிழ் உதவிக் கல்விப் பணிப்பாளர் மடு வலயக்கல்விப் பணிமனையிலும் 34 வருடங்கள் அரச சேவை செய்து ஓய்வு பெற்றார்.

மறைப்பணி, பொதுப்பணி, கல்விப்பணி, நாடகநெறியாள்கை கலைஞர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். இது யார் குற்றம், அடிகள் முன்னேற்றப்படிகள், உன்னையே நீ அறிவாய் போன்ற சமூக நாடகங்களையும் வேட்டை சரித்திர நாாடகத்தையும், பாவ சங்கீர்த்தனம், அப்பா வருவார், அவர்கள் காத்திருக்கின்றார்கள், இருந்தென்ன போயென்ன, இயற்பகை நாயனார், இம்பர் உலகில் இன்னொரு இறைமகன் ஆகிய சமய நாடகத்தையும், வெள்ளிக்கிழமை விநோதம் நகைச்சுவை நாடகத்தையும், தர்மத்தின் தலைமகன் இலக்கிய நாடகத்தையும் நெறியாள்கை செய்துள்ளதுடன் சில நாடகங்களில் நடித்தும் உள்ளார். மொழிபெயர்ப்பு, வில்லுப்பாட்டு, நூலாய்வு என பன்முகத்தன்மை கொண்டவர்.

விருதுகள்

தர்ம பிரபஷ்வரா கத்தோலிக்க தேசிய விருது – 2018


வெளி இணைப்புக்கள்