"ஆளுமை:குகபாலன், கார்த்திகேசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:குகபாலன், கா., ஆளுமை:குகபாலன், கார்த்திகேசு என்ற தலைப்புக்கு நகர்த்தப்...)
(வேறுபாடு ஏதுமில்லை)

02:26, 21 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் குகபாலன்
தந்தை கார்த்திகேசு
தாய் பொன்னம்மா
பிறப்பு 24.02.1948
ஊர் புங்குடுதீவு
வகை பேராசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குகபாலன், கார்த்திகேசு (1948.02.24 - )புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர். இவரது தந்தை கார்த்திகேசு; தாய் பொன்னம்மா. இவர் ஆரம்பக் கல்வியைப் புங்குடுதீவு சித்தி விநாயகர் வித்தியாலயம், நுவரெலியா திருத்துவக் கல்லூரியிலும் உயர் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பயின்று பேராதனைப் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகி 1971 ஆம் ஆண்டு புவியியற்துறைச் சிறப்புக் கலைப் பட்டதாரியாக வெளியேறிய இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் குடிசனத் தொகைக் கல்வியில் கொண்ட ஆர்வத்தால் சென்னைப் பல்கலைக்கழகத்தில் டிப்ளோமாப் பட்டத்தையும் பெற்றார்.

1972 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகவும் 1979 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் கடமையாற்றி, 1997 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டு அடுத்த ஆண்டு முதல் புவியியற்துறைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

பேராசிரியர் குகபாலன் இதுவரை 50 இற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளதோடு பத்துக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். இவற்றுள் 1994 இல் தனது தாயாரின் நினைவாகத் தீவகம் வளமும் வாழ்வும் நூலை எழுதினார். இதற்குச் சாகித்திய மண்டல பரிசும் வட கிழக்கு மாகாணச் சாகித்தியப் பரிசும் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 175-176