ஆளுமை:காஸீம், முஹம்மது மீராசாயிபு

From நூலகம்
Name முகம்மது காஸீம் ஆலிம்
Pages முஹம்மது மீராசாயிபு
Pages பாத்து முத்தும்மா
Birth 1912.02
Place மன்னார்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முகம்மது காஸீம் ஆலிம், முஹம்மது மீராசாயிபு (1912.02 - ) மன்னார், விடத்தல்தீவைச் சேர்ந்த புலவர், எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மது மீராசாயிபு; தாய் பாத்து முத்தும்மா. தொண்டிப் பிச்சை, காஸிம் புலவர் என்றெல்லாம் செல்லமாக அழைக்கப்படும் இவர், ஆரம்பத்தில் தனது வீட்டில் இருநூறு புத்தகங்களுடன் ஒரு நூலகத்தை உருவாக்கியிருந்தார். சமாதான நீதவானாகிய இவர், தமிழ் முழக்கம், செந்தமிழ்ப் புலவர், சிவநெறி அன்பர், செந்தமிழ் வாரிதி போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார்.

இந்தியா சென்று கீழக்கரை, தொண்டி, காயல் பட்டினம் போன்ற இடங்களில் மார்க்கக் கல்வியையும் தமிழ் இலக்கணத்தையும் கற்றுப் பாண்டித்தியம் பெற்றார். இவரது கள்ளத் தோணிக்குத் தீர்ப்பு நாவல் 1958 இல் வெளிவந்தது. இந்நாவல் இலங்கையிலிருந்து இந்தியாவிற்குக் கள்ளத் தோணியில் செல்லும் போது ஏற்படும் அனுபவத்தைக் கருப் பொருளாகக் கொண்டமைந்தது. தமிழகச் சஞ்சிகைகளான பிறைதூதன், நூறுல் ஹக், கலைமகள், காலைக் கதிர் போன்றவற்றில் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். இஸ்லாம் தத்துவார்த்தம் (1951), பத்வா என்னும் மார்க்கத் தீர்ப்பு (1970), மாநபியே- கவிதைத் தொகுதி (1972) ஆகியன இவரது நூல்கள். இவரது மன்னார் நாட்டுப் பாடல்கள் என்னும் தொகுப்பு நூல் மன்னார் கலாச்சாரப் பேரவையினால் 1975 காலப்பகுதியில் கலாநிதி சு.வித்தியானந்தனால் வெளியிடப்பட்டது.

Resources

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 50-54
  • நூலக எண்: 16357 பக்கங்கள் 196-215