ஆளுமை:காயத்திரி, கோபிசுதன்

From நூலகம்
Name காயத்திரி
Pages யோகேந்திரா
Pages பிரேமவசந்தி
Birth 1987.12.09
Place தெல்லிப்பளை
Category ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

காயத்திரி, கோபிசுதன் (1987.12.09) யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் பிறந்த ஊடகவியலாளர். இவரது தந்தை யோகேந்திரா; தாய் பிரேமவசந்தி. ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாணம் மயிலணி சைவ மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம் சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாசாலை, இடைநிலை , உயர்நிலைக் கல்வியை தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலும் கற்றார். திருகோணமலை வளாகம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொடர்பாடல் கற்கை நெறியில் விசேட கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். தனது முதுமாணிக் கற்கை நெறியினை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாகத் தொடர்கிறார்.

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் செய்திப் பிரிவில் 2012ஆம் ஆண்டு தொடக்கம் இணைந்து தமிழ்ச் செய்தி பிரிவில் செய்தி தயாரிப்பாளராகக் கடமையாற்றி வரும் ஒரே பெண் இவராகும். ஊடகத்துறைசார் பெண்களுக்கான அடக்குமுறைக்கு எதிராகவும் அவ்வப்போது தனது குரலை உயர்த்த இவர் தயங்கமாட்டார். இவர் எழுதிய ஒரு சில கட்டுரைகள் தினகரன் நாளிதழில் வெளிவந்துள்ளன. செய்தித் தயாரிப்பாளராகவும், நாளேடுகளின் இன்று என்ற பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சியிலும் அறிவிப்பாளராக கடமையாற்றி வருகிறார். பல நேரடி நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறார் காயத்திரி. பாடசாலை காலத்திலேயே விவாதம், கவிதை, பேச்சு, கட்டுரை எழுதுதல் ஆகியதுறைகளில் மாவட்டம், மாகாண மட்டங்களில் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். விளையாட்டுத்துறையில் இவரின் ஈடுபாடு காரணமாக ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தேசிய வலைப்பந்தாட்ட பெண்கள் அணியிலும் இடம்பிடித்துள்ளார்.


குறிப்பு : மேற்படி பதிவு காயத்திரி, கோபிசுதன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.