ஆளுமை:கவிதா, எம்

From நூலகம்
Name M.கவிதா
Pages பால்சாமி சுந்தர்ராஜன்
Pages சுந்தர்ராஜன் ராமாஜி
Birth
Place படப்படி தலைமன்னார்
Category பெண் ஆளுமை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கவிதா, எம் படப்படி தலைமன்னாரைச் சேர்ந்த பெண் ஆளுமை இவரது தந்தை பால்சாமி சுந்தர்ராஜன், தாய் ராமாஜி. சிறுவயது முதலே இவரின் தாயாரும் அவரின் தாயாரும் பனைசார் கைவினைப்பணியில் ஈடுபாடுள்ளவர்கள். இப் பனைக் கைப்பணியில் இவர் பாடசாலைக் காலத்தில் ஈடுபடத் தொடங்கினார். கைவினையாளரான இவர் எயிட்ஸ் தொற்றுநோய் விழிப்புணர்வு பயிற்சி ஆசிரியர், லெதர் பயிற்சி ஆசிரியர், உதயம் கைப்பணி அபிவிருத்தி சங்கத்தின் தலைவரென தன்னை பன்முக ஆளுமை கொண்ட அடையாளப்படுத்தும் பெண் ஆளுமையாவார்.

பாய் பல அளவுகள், சுளகு, நீற்றுப்பெட்டி, பெட்டி, கடகம் பல அளவுகள், கைப்பைகள், சின்ன அடுக்குப் பெட்டிகள், திருகணி, இடியப்பத்தட்டு, தளவிரிப்புகள், பூச்சாடிகள், தொப்பிகள், மொடல் உருவம், லெதர் பயிற்சி பெற்றிருப்பதால் அதனையும் கைப்பணியுடன் இணைத்து அதிகமான கைப்பைகளை செய்து வருகிறார்.

2006 இல் யுத்தசூழலில் இவரது கணவன் காணாமல் போயுள்ளார். அதன் பின்னர் தனது மகனுடனும் தனது பெற்றோருடனும் வாழ்ந்து வந்தார். ஆரம்பத்தில் தந்தையின் பட்டறை.வேலைக்கு உதவியாக இருந்தாலும் தந்தை நோயாளியான பின்னர் முழுக்குடும்பப் பொறுப்பும் இவரது தலையில் வந்தது. எனவே மைக்குறோ நிறுவனத்தினூடாக கைப்பணி, லெதர்பயிற்சியை முடித்த இவர் சுயதொழிலாகவும் கைத்தொழிலாகவும் அத்தொழிலில் ஈடுபடத் தொடங்கினார். இதன் பின்னர் இவரும் இவருடன் 6 பெண்கள் சேர்ந்து உதயம் பெண்கள் கைப்பணி மையம் என்ற அமைப்பை உருவாக்கினார்கள் தற்போது அது 62 பெண்களுடன் உதயம் பெண்கள் கைப்பணி அபிவிருத்திச்சங்கம் என பரிமாற்றம் கொண்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஞாலத்தில் புதுமை புகும் தாலம் என்ற பனைசார் உற்பத்திகள், கண்காட்சியில் இவர்கள் பங்குபற்றி மாவட்டமட்டத்தில் முதலிடத்தைப் பெற்றனர். அதுமட்டுமல்லாது இவர்களது அமைப்புரீதியாக 20 பெண்களுக்கு பனைசார் கைப்பணிகளை இலவசமாக கற்பிக்கின்றார்கள்.

வெளி இணைப்புக்கள்