ஆளுமை:கல்யாணசுந்தரம், சின்னத்தம்பி

From நூலகம்
Name கல்யாணசுந்தரம்
Pages சின்னத்தம்பி
Birth 1939.12.22
Place இணுவில்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கல்யாணசுந்தரம், சின்னத்தம்பி (1939.12.22 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த தவில் கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி. தனது இருபது வயதிலிருந்து தவில் இசைப்பதில் தேர்ச்சியும் ஆற்றலும் கொண்டிருந்த இவர், பரம்பரை வழியாக இவ் இசைத் தொழிலை மேற்கொண்டு வருகின்றார். இவர் தவில் இசையைத் தனது பேரன் கந்தையா, சிறிய தந்தை கிருஷ்ணமூர்த்தி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தவில் வித்துவான் பழனி, இணுவில் என். ஆர். சின்னராசா ஆகியோரிடம் முறைப்படி கற்றுப் பின்னர் இந்தியா சென்று, தவிலிசையின் நுட்பங்களைத் தவில் கலைமாமணி சண்முகசுந்தரம்பிள்ளையிடம் கற்றுத்தேர்ந்தார்.

இலங்கை திரும்பிய இவர், யாழ்ப்பாணம் அளவெட்டி என். கே. பத்மநாதனுடன் கூட்டாக இணைந்து தனது தவில் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தினார். இவ்வாறு நிகழ்த்தப்பட்ட நிகழ்ச்சிகளின் வாயிலாக ஈழம் புகழ் தவில் வித்துவான் விருது இவருக்குக் கிடைத்தது. பின்னர் இந்தியா சென்று 1970 இல் ஷேக் சின்னமௌலானா, ஏ. வி. செல்வரத்தினம் கலைஞர்களுடன் தவில் இசைத்துத் தவில் நாத பேரொளி என்ற விசேட விருதினையும் பெற்றுக் கொண்டார். மேலும் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த என்.கே.கணேஸ் என்பவருடன் தவில் வாசித்து லயஞான மணி விருதினையும் பெற்றுக் கொண்டார்.

இவர் இசைத்துறையில் யாழ்ப்பாணத்திலும் வெளி மாவட்டங்களிலும் தென்னிந்தியாவிலும் ஆற்றிய பணியைப் பாராட்டி நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை கலைஞானச்சுடர் விருதை 2008 ஆம் ஆண்டு வழங்கிக் கௌரவித்துள்ளது.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 94