ஆளுமை:கலாமோகன், கிருஷ்ணபிள்ளை

From நூலகம்
Name கலாமோகன்
Pages கிருஷ்ணபிள்ளை
Birth 1957.12.31
Place புத்தூர்
Category ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கலாமோகன், கிருஷ்ணபிள்ளை (1957.12.31 - ) யாழ்ப்பாணம், புத்தூரைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை கிருஷ்ணபிள்ளை. பாடசாலையில் படிக்கும் போது ஓவியம், சிற்பம், மரத்திலான சிற்பங்கள் ஆகியவற்றை வடிவமைத்தார்.

இவர் மாத்தளை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 1976 இல் தனது கலைப்பணியை ஆரம்பித்ததோடு, தெல்லிப்பளை துர்க்கை அம்மன், இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார், சரசாலை நுணாவில் பிள்ளையார், சாவகச்சேரி முத்துமாரி அம்மன் ஆலயங்களில் தேர், வாகனம், கேடகம், கொடிமரம் போன்ற சிற்பங்களைச் செதுக்கியுள்ளார்.

இவரது திறமைக்காகச் சிற்பக் கலைச் செல்வன், சிற்ப கலாமணி, சிற்ப கலா இரத்தினம், சிற்ப கலாகேசரி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 240