ஆளுமை:கப்பார், எஸ். ஏ.

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:10, 26 மார்ச் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=எஸ். ஏ. கப்பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் எஸ். ஏ. கப்பார்
தந்தை சுலைமாலெவ்வை செய்னுலாப்தீன்
தாய் முகமது அவூவக்கர் முஸ்தபா வீவி
பிறப்பு 1959.01.09
ஊர் மருதமுனை, அம்பாறை
வகை எழுத்தாளர், கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கவிஞர் எஸ். ஏ. கப்பார் அவர்கள் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தின் மருதமுனையில் 1959.01.09 இல் சுலைமாலெவ்வை செயினுல் ஆப்தின் மற்றும் முகமது அவூவக்கர் முஸ்தபா வீவி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை மருதமுனை கமு/ அல்-ஹம்றா வித்தியாலத்திலும், இடைநிலைக் கல்வியை கல்முனை கமு/ கார்மேல் பாத்திமா கல்லூரியிலும், உயர் கல்வியை சம்மாந்துறை கமு/ முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் பயின்றார். 1977 ஆம் ஆண்டு இவரது முதலாவது சிறுகதையான அவன் என்ன செய்துவிட்டான் ஸாஹிறா இலக்கிய இதழில் பிரசுரமானது. அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு உள்ளம் இலக்கிய இதழில் உயரத்தில் இருப்பவன் எனும் உருவகக் கதையும் பிரசுரமானது. 1979ஆம் ஆண்டு உயர் கல்வி கற்கும் காலங்களில் ஒரு சுயதொழில் ஒன்றை கற்றுக்கொள்ளும் நிமித்தம் மருதமுனை இளம்பிறை அச்சகத்தில் பகுதி நேர அச்சுக் கோப்பாளராகவும் ஒப்புநோக்காளராகவும் பணியாற்றியுள்ளார்.

இலக்கியவாதிகளான கவிஞர் மருதூர் கொத்தன், அதிபர் திலகம் அப்துல் மஜீத், பாவலர் பஸீர் காஸியப்பர் போன்றோர்களின் சந்திப்புகள் ஏற்பட்டுள்ளது. இக்காலப்பகுதியிலேதான் வெண்ணிலா சஞ்சிகை வெளியிடுவதற்கான சந்தர்ப்பம் அமையப்பெற்றது. அப்போது வெளியிட்ட சஞ்சிகையானது கலை இலக்கிய சார்ந்ததாக அமையப்பெற்றது அதாவது அதில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நகைச்சுவை, துணுக்குகள் போன்ற அம்சங்கள் இடம்பெற்றன. பின்னர் சில காரணங்களால் சஞ்சிகை வெளிவரவில்லை ஆனால் 43 வருடங்களின் பின்னர் தொடர்ச்சியாக 12 பிரதிகளை வெளியிட்டார்.

இதில் கவிதைளுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதுடன் வளர்ந்து வரும் கவிஞர்களினதும் மூத்த இலக்கியவாதிகளின் படைப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டு காவியன் எனும் புனைப்பெயரில் “வெண்ணிலா” கலை இலக்கிய சஞ்சிகையின் 12 பதிப்புக்களை வெளியிட்டார். 1981 ஆம் ஆண்டு இலங்கை வங்கியில் ஓர் இலிகிதராக 34 வருடங்கள் சேவையாற்றி பல பதவி உயர்வுகள் பெற்று இறுதியாக முகாமையாளராக 27.02.2015 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். 2004 – 2006 காலப்பகுதியில் தேசிய பத்திரிகையில் தொடர்ச்சியாக வெளியிட்ட கவிதைகளில் 25 கவிதைகளை தெரிவு செய்து “நிலவு அவள்” எனும் கவிதைத் தொகுதியை 2019 ஆம் ஆண்டு புத்தகமாக வெளியிட்டார்.

அவர் மேலும் A Guide to PC users (Tamil), A Guide to PC users (English), Quick references to MS Excel 2000 (Tamil), Quick references to MS Word 2000 (Tamil), Quick references to MS Access 2000 (Tamil), Quick references to MS Excel 2000 (English), இன்ரநெட்டும் ஈமெயிலும், கொம்பியூட்டர் கவிதைகள் போன்ற கணினிக் கல்வி மற்றும் கணனி மென்பொருள் தொடர்பான 08 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 2005 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றதன் பின்னர் இலங்கை வங்கி தலைமைக் காரியாலயத்தில் கணினிப் பிரிவிலும் பணியாற்றியுள்ளார்.

தினகரன் பத்திரிகையும், மானஸி நிறுவனமும் 2004ம் ஆண்டு இணைந்து நடாத்திய முத்திரைக் கவிதை போட்டியில் இவரது என் காதல் நீதான்… கவிதை முதல் பரிசு பெற்றது. 2022 ஆம் ஆண்டு ஊவா வானொலியில் தொகுப்பாளினி பாத்திமா றிஸ்வானா அவர்கள் தயாரித்து வழங்கும் "நெஞ்சம் மறப்பதில்லை" நிகழ்ச்சியில் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்தார். இவருக்கு 2022 ஆம் ஆண்டு கல்முனை பிரதேச செயலகத்தினால் கலைஞர் சுவதம் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. அத்தோடு 2023 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெண்ணிலா கவிதை மஞ்சரிக்கு விருது வழங்கப்பட்டது.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:கப்பார்,_எஸ்._ஏ.&oldid=604038" இருந்து மீள்விக்கப்பட்டது