ஆளுமை:கனகாம்பாள், சதாசிவம்

From நூலகம்
Name கனகாம்பாள், சதாசிவம்
Pages செல்வமணி
Pages அம்மைமுத்து
Birth 1937.05.02
Pages -
Place புத்தூர்
Category இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகாம்பாள், சதாசிவம் (1937.05.02) யாழ்ப்பாணம், புத்தூரைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை செல்வமணி; தாய் அம்மைமுத்து. 1947ஆம் ஆண்டில் இசையுலகில் தடம் பதித்த இவர் கண்ணன், அருணா, மண்டலேஸ்வரன் ஆகிய இசைக் குழுக்களில் பாடியுள்ளார்.

இவர் ஐந்நூறுக்கும் மேற்பட்ட இசை மேடைகளில் தென்னிந்தியக் கலைஞர்கள், சிங்களக் கலைஞர்களுடன் இணைந்து தனது ஆற்றலை வெளிக்காட்டியுள்ளார். ஞானப் பழத்தைப் பிழிந்து என்ற பாடலை பிரபல தென்னிந்திய பாடகி சுந்தராம்பாள் முன்னிலையில் பாடி அவரது வாயாலேயே ஈழத்து சுந்தராம்பாள் என்ற பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். மேலும் ஈழத்து பட்டம்பாள் எனும் சிறப்பு பட்டத்தையும் இவர் பெற்றமை குறிப்பிடத்தக்கது.