ஆளுமை:கனகராசா, கந்தையா

From நூலகம்
Name கனகராசா
Pages கந்தையா
Birth 1927.11.02
Pages 1998.07.22
Place வண்ணார்ப்பண்ணை
Category சமூக சேவகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகராசா, கந்தையா (1927.11.02 - 1998.07.22) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்ட சமூக சேவையாளர். இவரது தந்தை கந்தையா (மில்க்வைற் ஸ்தாபகர்). இவர் தனது தந்தைக்குப் பின் மில்க்வைற்றின் பொறுப்பை ஏற்றார். அத்தோடு சமூக சமயச் செயற்பாடுகளிலும் தமிழர் கலை கலாச்சார விழுமியங்கள், பண்பாடு என்பவற்றைக் காப்பதிலும் முன்னின்று செயற்பட்டார்.

இவர் மில்க்வைற் செய்திகள் என்ற இதழை வெளியிட்டுள்ளார். பனை வளத்தைப் பாதுகாப்பது தொடர்பாக பனைமர சோபனம், பனையின் பயன், தாலவிலாசம், பனைவளம், நவீன முறையில் பனை வெல்லம் போன்ற வெளியீடுகளை இலவசமாக வெளியிட்டு மக்களுக்கு விழிப்பூட்டினார். .

இவர் பனை, முருங்கை, பப்பாசி, வேம்பு, துளசி, குரக்கன் போன்ற தாவரங்களை வளர்த்தல், மருந்துத் தேவைகளுக்காக மூலிகைச் செடிகளை வளர்த்தல் ஆகியவற்றிற்கு முக்கியம் கொடுத்தார். இச்சேவையைப் பாராட்டி 'பூலோக கற்பகதரு நாயகர்', 'தாலகாவலர்' ஆகிய கெளரவங்கள் வழங்கப்பட்டதோடு சமய, சமூகப் பணிகளுக்காகச் சிவநெறிப்புலவர், சிவதர்ம வள்ளல், செந்தமிழ்ச் செல்வர், திருக்குறட் காவலர் ஆகிய பட்டங்களையும் பெற்றார். இடம்பெயர்ந்த காலங்களில் நிறைவான மக்கள் சேவையைச் செய்தமைக்காக இவருக்குத் தேசாபிமானி என்ற பட்டமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இவர் சமாதான நீதவானாகவும் கடமையாற்றியுள்ளார். இவரைப் பாராட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கிக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 15