ஆளுமை:கனகசபை, முத்தையா

From நூலகம்
Name கனகசபை
Pages முத்தையா
Birth 1925.03.12
Place கொழும்புத்துறை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகசபை, முத்தையா (1925.03.12 - ) யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைச் சேர்ந்த கலைஞர், ஆசிரியர், கைப்பணிக் கல்வியதிகாரி. இவரது தந்தை முத்தையா. இவர் பதின்னான்கு வயதில் தமிழ் எக்ஸ். எக்ஸ். சி பரீட்சையில் சித்தியடைந்தார். சம்பத்திரிசியார் கல்லூரியில் 3 வருடங்கள் ஆசிரியராகக் கற்பித்து, கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 3 வருடங்கள் ஆசிரியர் பயிற்சி பெற்றவர். தொடர்ந்து பம்பலப்பிட்டி வெலிசற விவசாயப் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றவர். லண்டன் க. பொ. த உயர்தரப் பரீட்சையில் ஓவியத்தை ஒரு பாடமாகக் கற்று 'B' தரத்தில் சித்தியடைந்தார். கொழும்பு நுண்கலைக் கழகத்தில் 1949-1950 இல் ஓவியப் பயிற்சி பெற்றார். இவர் 21 வருடங்கள் அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். நவீன, மரபு ரீதியான ஓவியங்களை வரைந்துள்ள இவர், சுமார் 70 இற்கும் மேற்பட்ட ஓவியங்களை நெய் வர்ணத்தினால் வரைந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாண நூல் நிலையம் ஆகிய இடங்களில் காட்சிப்படுத்தியுள்ளார்.

நிகழ்ச்சித் சித்தரிப்பை முதன்மைப்படுத்தும் இவரது ஓவியங்களில் வண்டிற்சவாரி, நல்லூர்த் தேர்த் திருவிழா, சந்தைக்குச் செல்லும் மீன் விற்கும் பெண்கள், பறையடித்தல், சாமி காவுதல், மழையில் நனைந்த ஆட்டை இழுத்துச் செல்லுதல், தோணியில் பாய் இளக்குதல் என்பவை குறிப்பிடத்தக்கவை ஆகும். இவர் ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த பிரதிமை ஓவியங்களை வரைந்துள்ளார். இவற்றுள் தைலவர்ணத்தைப் பயன்படுத்தி காந்தியின் பிரதிமை ஓவியம் (1965), சுய பிரதிமை ஓவியங்கள் (1986), தாய் ஆகியவற்றை வரைந்துள்ளார். ' பாடசாலைக்குச் செல்லும் பொழுது' என்ற இவரது மனைவியின் பிரதிமை ஓவியம் இவரது திறமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இவரது ஓவியங்களில் நீலம், மஞ்சள் வர்ணப் பயன்பாடு அதிகமாகக் காணப்படுகின்றது.

இவர் 2004 இல் மாகாண ஆளுநர் விருதையும், 2005 இல் கலாகீர்த்தி என்னும் ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 10375 பக்கங்கள் 03-08
  • நூலக எண்: 2970 பக்கங்கள் 30
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 240