ஆளுமை:கந்தையா, வேலுப்பிள்ளை

From நூலகம்
Name கந்தையா
Pages வேலுப்பிள்ளை
Birth 1916.12.22
Place மிருசுவில்
Category ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தையா, வேலுப்பிள்ளை (1916.12.22 - ) யாழ்ப்பாணம், மிருசுவிலைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் 1936 இலிருந்து நாடகத்துறை, சிற்பத்துறை, கவித்துறை, ஓவியத்துறை ஆகிய பல துறைகளில் நாட்டம் கொண்டு காணப்பட்டார்.

ஒட்டுவெளி முருகன் ஆலயம், விழுபனை அம்மன் ஆலயம் ஆகிய ஆலயங்களில் இவர் ஊஞ்சற் பாக்கள் பாடியதோடு சீதனக் கொடுமை, பவளக்கொடி, முழுநிலா, பாக்கியைக் கொடு, பிச்சை வேண்டாம், நாயைப்பிடி ஆகிய சமூக நாடகங்களும் வில்லிசைக் கூத்துக்களும் கிராமியக் கூத்துக்களும் இவரால் மேடையேற்றப்பட்டுள்ளன.

இவரது சேவைக்காகச் சித்திர பாஸ்கரன், சிந்தனைச் சிற்பி, சிறுகதை வல்லுநர், பல்கலை வித்தகன், பாவேந்தன் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 239