"ஆளுமை:கந்தையா, அம்பலவாணர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 19: வரிசை 19:
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87._%E0%AE%85._%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE  வே. அ. கந்தையா ]
 
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87._%E0%AE%85._%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE  வே. அ. கந்தையா ]
 +
 +
[[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]]

14:46, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் கந்தையா
தந்தை அம்பலவாணர்
தாய் இராசம்மா
பிறப்பு 1891.09.03
இறப்பு 1963.06.04
ஊர் வேலணை
வகை அரசியல் தலைவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தையா, அம்பலவாணர் (1891.09.03 - 1963.06.04) வேலணை, வங்களாவடியைப் பிறப்பிடமாகக் கொண்ட அரசியல் தலைவர். இவரது தந்தை அம்பலவாணர்; தாய் இராசம்மா. இவர் கல்வியை அமெரிக்கமிஷன் பாடசாலையிலும் யாழ் இந்துக் கல்லூரி, கொழும்பு புனித யோசேப்பு கல்லூரி ஆகியவற்றில் கற்றார். பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் உயர் படிப்பை மேற்கொண்டு கணிதத்தைச் சிறப்புப் பாடமாகப் பயின்றதுடன் கொழும்புச் சட்டக்கல்லூரியில் சட்டம் கற்றார். இலண்டன் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டம் பெற்றார்.

சட்ட நுணுக்கங்களில் தேர்ந்த இவர், தமிழர்களுக்கு மட்டுமன்றித் தென்னிலங்கை மக்களுக்கும் வசதி படைத்த இந்திய வர்த்தகருக்கும் சட்ட ஆலோசகராக விளங்கிப் பெரும் புகழ் பெற்றார். இலங்கையில் முதன் முறையாக சிலப்பதிகார விழாவை 1954 ஆம் ஆண்டு புங்குடுதீவின் தெற்குக்கடலோரமாக அமைந்துள்ள கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் நிகழ்த்தினார். இதனைத்தொடர்ந்து 1955 ஆம் ஆண்டு வேலணையில் திருமுறை மகாநாட்டை நடாத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவற்றுடன் 1947, 1952 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஊர்காவற்துறைத் தேர்தல் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 481-491

வெளி இணைப்புக்கள்