ஆளுமை:கந்தவனம், சண்முகம்

From நூலகம்
Name கந்தவனம்
Pages சண்முகம்
Birth
Place ஏழாலை
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தவனம், சண்முகம் யாழ்ப்பாணம், ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர், கவிஞர், நாடகாசிரியர். இவரது தந்தை சண்முகம். இவர் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. தெல்லிப்பளையில் அமைந்த அமெரிக்கமிஷன் பாடசாலையில் (தற்போதைய யூனியன் கல்லூரி) கல்வி கற்ற இவர், ஆசிரியராகப் புன்னாலைக்கட்டுவன் மிஷன் பாடசாலைகளில் கடமையாற்றியதோடு, சாவகச்சேரி கிறிஸ்தவ சபையின் உபதேசியராகவும் கடமையாற்றியுள்ளார். மக்களுடைய நல்வாழ்வு கள் குடிப்பதால் கெடுகிறது என்பதை நன்குணர்ந்த இவர், மக்களுக்கு நல்வழியை உபதேசிக்கத் திட்டம் இட்டு கள்ளுநாடகம் ஒன்றை எழுதி மேடை ஏற்றினார்.

தமிழிலக்கியம், யாப்பிலக்கணம், நிகண்டு ஆகியவற்றிலும் பேச்சு, தர்க்கவியல் ஆகியவற்றிலும் தேர்ச்சியுடைய இவர், கிறிஸ்தவ சுவிஷேஷ போதனைகளின் போது தாம் இயற்றிய பாடல்களைப் பாடுவார். வடக்குப் புன்னாலைக்கட்டுவன் சந்தியிலிருந்து மல்லாகம் சந்திக்கு ஏழாலைக்கூடாகச் செல்லும் வீதியைத் திறப்பதற்குப் பாடுபட்ட இவர், மக்கள் மத்தியில் ஏற்படும் சிறு பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தார்.

Resources

  • நூலக எண்: 11642 பக்கங்கள் 231-234