ஆளுமை:கதிர்காமத்தம்பி, சு.

From நூலகம்
Name கதிர்காமத்தம்பி
Birth 1929.11.30
Pages 1977.02.19
Place கரவெட்டி
Category விளையாட்டு வீரன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கதிர்காமத்தம்பி, சு. (1929.11.30 - 1977.02.19) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த விளையாட்டு வீரன். 1948 இல் ஹாட்லிக் கல்லூரியில் உதவித் தலைவராகக் கடமையாற்றிய இவர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மென்துடுப்பந்தாட்டப் போட்டியில் சாதனையாளரானார். பின்னர் 1949 இல் நெல்லியடி மகா வித்தியாலயத்தில் கணித ஆசிரியராகப் பணியாற்றினார். மேலும் 1953 இல் விளையாட்டுத்துறைப் பயிற்சிக்காக இந்தியா சென்று திரும்பி 1964 இல் வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் பணியாற்றி வந்தார். பாடசாலைகளில் மல்யுத்தம், குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுக்களை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்.

வடமராட்சியில் முதன் முதலாக மல்யுத்தம், குத்துச் சண்டை, சாகசச் செயற்பாடுகளை ஒன்றிணைத்து அறிமுகம் செய்த பெருமை இவருக்குரியது. இவரும் இவரது மாணவருமான சாண்டோ M. துரைரத்தினமும் சேர்ந்து சவனாய் புலோலி கிழக்கு பருத்தித்துறையில் ஜிம்னாசியம் என்ற விளையாட்டுக் கழகத்தை உருவாக்கினார்கள்.

Resources

  • நூலக எண்: 5973 பக்கங்கள் 33