ஆளுமை:எசேக்கியேல், செபமாலை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:12, 5 மே 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, ஆளுமை: எசேக்கியேல், செபமாலை பக்கத்தை ஆளுமை:எசேக்கியேல், செபமாலை என்ற தலைப்புக்கு வழிமா...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் எசேக்கியேல்
தந்தை செபமாலை
தாய் பாக்கியம்
பிறப்பு 1933.12.08
ஊர் கிளிநொச்சி, இரணைமாதாநகர்
வகை கூத்துக்கலைஞர், நவரச நடிகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


எசேக்கியேல், செபமாலை அவர்கள் (1933.12.08 - ) இல் கிளிநொச்சி, இரணைதீவு பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட கூத்துக்கலை மற்றும் நவரச நடிகர் ஆவார். இவரது தந்தை செபமாலை; தாய் பாக்கியம். இவர் இரணைதீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை பூர்த்தி செய்து கொண்டார்.

தனது 21 வயதில் அமரர் மரியான் தலைமையில் மேடையேற்றப்பட்ட மனோகரா நாடகத்தில் நடித்ததோடு ஆரம்பித்தது இவரின் கலைப்பயணம். சின்னப்பூ அண்ணாவியின் செபஸ்தியார் நாடகத்தில் 1959 ஆம் ஆண்டு செபஸ்தியார் பாத்திரமேற்று நடித்தார். 1969 ஆம் ஆண்டு மேடையேற்றப்பட்ட அந்தோனியார் நாடகத்தில் தோழிப் பெண் பாத்திரம் ஏற்று நடித்தார். 1970 ஆம் ஆண்டு மேடையேற்றப்பட்ட கோலியாத் நாடகத்தில் தாவீது பாத்திரமேற்றார். 1981 ஆம் ஆண்டு மேடையேற்றப்பட்ட சந்தியோகுமையோர் நாடகத்தில் சேனாதிபதியாக பாத்திரமேற்றார். 1978ஆம் ஆண்டு மருசலீன் அண்ணாவி பழக்கிய ஞானசவுந்தரி நாடகத்திலும் நடித்தார். மருசலீன் அண்ணாவி பழகிய நொண்டி நாடகத்தில் நடித்தார். இவர் ஒரு குணச்சித்திர நடிகர், நவரச நாயகன் ஆவார். திருவிழாக்களில் அரசு பாத்திரம், மந்திரி பாத்திரம் பாட்டு வேறுபட்ட குரல் மற்றும் நகைச்சுவை எல்லாம் செய்யக் கூடியவர்.