ஆளுமை:இராமலிங்கம், தாமோதரம்பிள்ளை

From நூலகம்
Name இராமலிங்கம்
Pages தாமோதரம்பிள்ளை
Birth 1905
Place உடுப்பிட்டி
Category அரசியல்வாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமலிங்கம், தா. (1905 - ) யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த அரசியல்வாதி. இவரது தந்தை தாமோதரம்பிள்ளை. இவர் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி, கொழும்பு ஆனந்தாக் கல்லூரி, கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று, விஞ்ஞானப் பட்டதாரியாகிப் பின்னர் சட்டக் கல்லூரியில் வழக்குரைஞர் பயிற்சி பெற்று யாழ்ப்பாணத்தில் உள்ள நீதிமன்றங்களில் பல வழக்குகளில் ஆஜராகியுள்ளார்.

கொழும்பு நீதவான் மன்றில் நீதிபதியாகப் பதவி ஏற்ற இவர், அதன் பின்னர் பாணந்துறை மாவட்ட நீதிபதியாகவும் பின்னர் மாத்தறை மாவட்ட நீதிபதியாகவும் பதவி வகித்தார். தொடர்ந்து பருத்தித்துறையின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட இவர், பாராளுமன்றத்தில் குழுக்களின் முதலாவது துணைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் இவர் கட்டுவித்த ஒரு தொகுதிக் கட்டடம் இராமலிங்கக் கட்டிடத்தொகுதியென்று இன்றும் அழைக்கப்படுகின்றது.

வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 11851 பக்கங்கள் 20-24