ஆளுமை:இயேசுதாசன் சரவணமுத்து, சாமித்தம்பி

From நூலகம்
Name இயேசுதாசன் சரவணமுத்து
Pages சாமித்தம்பி
Pages நாகம்மை
Birth 1930.03.16
Place துறைநீலாவணை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இயேசுதாசன் சரவணமுத்து, சாமித்தம்பி (1930.03.16 - ) மட்டக்களப்பு, துறைநீலாவணையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சாமித்தம்பி; தாய் நாகம்மை. இவர் தனது பாடசாலைக் கல்வியை துறைநீலாவணை மெ. மி. பாடசாலை, பெரிய கல்லாறு மெ. மி. பாடசாலை ஆகியவற்றில் கற்று, மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையில் ஆசிரியருக்கான பயிற்சி பெற்றார்.

பத்திரிகையில் சிறுகதை, கவிதை, கட்டுரை என்பவற்றை எழுதியுள்ளார். மலையிலே சொன்னது, இயேசு அந்தாதி, புலம்பல் நூறு, விழித்தெழுங்கள், பரமகுரு தரிசனம், பொறுமை, வள்ளுவர் ஞானம் முதலான பல சிற்றிலக்கியங்களை உருவாக்கியுள்ளார்.

இவர் ஹோமியோபதி வைத்தியம், ஆயுள்வேத வைத்தியம், சோதிடம், முறிவு வைத்தியம் போன்றவற்றிலும் ஈடுபாடுடையவராகத் திகழ்ந்தார்.

Resources

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 155