ஆளுமை:இன்ஷிராஹ், இக்பால்

From நூலகம்
Name இன்ஷிராஹ்
Pages ஏ.சி.எம்.இக்பால்
Pages சுலைமா சமி
Birth
Place கிருங்கதெனிய
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இன்ஷிராஹ், இக்பால் கேகாலை மாவனல்லை கிருங்கதெனியவில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை ஏ.சி.எம்.இக்பால்; தாய் சுலைமா சமி இக்பால். தகவல் தொழில்நுட்பப் பட்டதாரி ஆசிரியையாவார். பாடசாலைக் காலத்திலேயே கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதும் ஆற்றல் கொண்டவர் எழுத்தாளர். பாடசாலை மட்டத்திலும், தேசிய மட்டதிலும் பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசில்களையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார் இன்ஷிராஹ். உயர்தரத்தில் கல்வி கற்கும் போதே 2009ஆம் ஆண்டு பூ முகத்தில் புன்னகை என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். 2013ஆம் ஆண்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் போது உயர் கல்வி அமைச்சு, பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் மத்தியில் நடாத்திய தேசிய ரீதியிலான ஆற்றல் நிகழ்ச்சியில் இவர் எழுதிய நிழலைத் தேடி என்ற சமூக நாவல் முதற் பரிசு பெற்றது. இதற்காக இவர் விருதும் ஒரு இலட்சம் ரூபாய் பணமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்த நாவல் 2014ஆம் ஆண்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தினால் வெளியிடப்பட்டது. இவரின் சிறுகதைகளையும், நாவலையும் இலங்கையின் பார்வையற்றோர் சங்கம் என்ற அமைப்பு குரல் வடிவில் இறுவட்டாகப் பதிவு செய்துள்ளது. இதனை இலங்கையிலுள்ள பார்வையற்றோர் மட்டுமன்றி பல நாடுகளையும் சேர்ந்த பார்வையற்றவர்களும் கேட்டுப் பயன்பெறக்கூடியதாக உள்ளனர்.

விருதுகள்

அகில இலங்கை தேசிய கவி சம்மேளனம் 2013ஆம் ஆண்டு நடத்திய விருது விழாவில் காவியப் பிரதீப கவிச்சுடர் பட்டம்.

வெளி இணைப்புக்கள்