ஆளுமை:அருளானந்தம், கணபதிப்பிள்ளை

From நூலகம்
Name அருளானந்தம்
Pages கணபதிப்பிள்ளை
Pages தங்கநேசம்
Birth 1959.06.24
Pages -
Place யக்குரே,களுவன்கேணி, மட்டக்களப்பு
Category வேட மதகுரு
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கணபதிப்பிள்ளை அருளானந்தம் (1959.06.24) யக்குரே, களுவன்கேணி மட்டக்களப்பைச் சேர்ந்த வேட மதகுரு ஆவார். இவரது தந்தை கணபதிப்பிள்ளை;தாய் தங்கநேசம். இவரது மனைவி சித்திரா. இவருக்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர். இவர் தரம் ஐந்து வரை களுவன்கேணி மெதடிஸ்த மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்றுள்ளார். இன்று வரை இவர் தமது வேடமரபினையும், சடங்காசாரங்களினையும் தலைமுறைகள் தாண்டியும் மேற்கொள்பவராகவும், தமது சடங்கு நடவடிக்கைகளை ஏனைய இடங்களுக்கும் சென்று முன்னின்று நடத்தக்கூடியவராகவும் காணப்படுகின்றார். வேடர் மொழி எனும் போது அவர்தம் சடங்கு நடவடிக்கைகளில், அவர்களினால் கடவுளராகக் கருதப்படும் அனைத்துக் கடவுளருக்குமான அழைப்புப் பாடல்கள், மன்றாட்டு அழைப்புக்கள் என்பவற்றினை ஓரளவு வேட மொழியில் பாடக்கூடியவராகவும் காணப்படுகின்றார். அத்துடன் தமிழர் கிராமிய வாய்வியலுடன் இணைந்த கடவுளர் சார்ந்த மந்திர வேலைகளையும்க்கூடியவராகவும் உள்ளார். அது மட்டுமல்லாது தனது சுய முயற்சியினால் சோதிடம் பார்த்தல், பஞ்சாங்கம் பார்த்தல், கை மருந்து செய்தல் முதலான திறன்களையும் வாய்க்கப் பெற்றுள்ளார்.