ஆளுமை:அப்துல் ஹமீத், ஹசன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:41, 14 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy பயனரால் ஆளுமை:அப்துல் ஹமீத், பி. எச்., ஆளுமை:அப்துல் ஹமீத், ஹசன் என்ற தலைப்புக்கு நகர்த்தப...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அப்துல் ஹமீத்
தந்தை ஹசன்
தாய் ஹாசியா உம்மா
பிறப்பு
ஊர் தெமட்டகொடை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்துல் ஹமீட், ஹசன் கொழும்பு, தெமட்டகொடையைச் சேர்ந்த தமிழ் அறிவிப்பாளர்; வானொலி, மேடை நாடக, மற்றும் திரைப்பட நடிகர். இவரது தந்தை ஹசன்; தாய் ஹாசியா உம்மா. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நீண்டகாலமாக அறிவிப்பாளராக பணியாற்றிய இவர் தமிழர் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளுக்கும், இந்தியா, சிங்கப்பூர் துபாய் போன்ற நாடுகளுக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளார்.

சில்லையூர் செல்வராசனின் றோமியோ ஜூலியற் கவிதை நாடகம், எஸ். ராம்தாசின் கோமாளிகள் கும்மாளம், கவிஞர் அம்பியின் யாழ்பாடி (இந்த நாடகம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பவள விழாவின்போது இறுவட்டாக வெளியிடப்பட்டது.), ஒரு வீடு கோவிலாகிறது, தென்னிந்திய கலைஞர்களும் பங்குபற்றிய எம். அஷ்ரப்கானின் அனிச்ச மலர்கள், சக்கரங்கள், கே. எஸ். பாலச்சந்திரனின் 'கிராமத்துக் கனவுகள் ஆகிய வானொலி நாடகங்களை இவர் இயற்றியுள்ளார். இலங்கையில் தயாரான கோமாளிகள் திரைப்படத்தில் நடித்த இவர் தென்னிந்திய சினிமாவிலும் கே. எஸ். ரவிகுமாரின் "தெனாலி", மணிரத்தினத்தின் " கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இலங்கையிலும், இந்தியாவிலும் பல மெல்லிசைப் பாடல்களையும், திரைப்படப்பாடல்களையும் எழுதியுள்ளார்.


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 147-149