"ஆளுமை:அகிலத்திருநாயகி, சிறிசெயானந்தபவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 13: வரிசை 13:
 
சிறைத்துறைத் தொழிலிலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இவர் சிங்களமொழியிலும் தேர்ச்சி பெற்றார்.  இதனால் பதவி உயர்வையும் பெற்றார்.  தனது 31 வயதில் கணவரை இழந்த இவர் தனது இரு பிள்ளைகளையும் நல்ல பிஜைகளாக உருவாக்கியுள்ளார்.  
 
விளையாட்டுத்துறையில் பிரகாசிக்க உதவிய முல்லைத்தீவு மாவட்ட ரூபவதி கேதீஸ்வரன் அவர்களையும் நன்றியுடன் நினைவு கூறுகிறார்.  இலங்கையில் மட்டுமல்லாது கடல் கடந்த நாடுகளான தாய்லாந்து, ஜப்பான்,  சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் விளையாட்டுத்துறை சார்ந்த தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். தனது 48 ஆவது வயதில் சிறைச்சாலைகளுக்கான விளையாட்டுப்போட்டி நடாத்தப்பட்டபோது சிறந்த வீராங்கனையாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 2008 ஆம் ஆண்டில் வெலிக்கடை, கண்டி போகம்பறை சிறைச்சாலை ஆகிய சிறைச்சாலைகளின் விளையாட்டு சாதனையாளர் என்ற விருதையும் சுவீகரித்துக்கொண்டுள்ளார். 2009 ஆம் ஆண்டின் தமிழ்சிங்கள புத்தாண்டு விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொண்டு 5000மீற்றர் ஓட்டப்போட்டியிலும் துவிச்சக்கரவண்டி ஓட்டப்போட்டியிலும் 1ஆம் இடத்தைப் பெற்றுள்ளார். 2010 ஆம் ஆண்டில் இலங்கையின் சிறந்த சாதனையாளர் என்ற விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன் கொழும்பில் நடைபெற்ற ”வண்ண இரவுகள் ” நிகழ்வில் ”ஏ” தர விளையாட்டு வீராங்கனை எனும் சான்றிதழையும் பெற்றுக்கொண்டார்.
+
விளையாட்டுத்துறையில் பிரகாசிக்க உதவிய முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்களையும் நன்றியுடன் நினைவு கூறுகிறார்.  இலங்கையில் மட்டுமல்லாது கடல் கடந்த நாடுகளான தாய்லாந்து, ஜப்பான்,  சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் விளையாட்டுத்துறை சார்ந்த தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். தனது 48 ஆவது வயதில் சிறைச்சாலைகளுக்கான விளையாட்டுப்போட்டி நடாத்தப்பட்டபோது சிறந்த வீராங்கனையாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 2008 ஆம் ஆண்டில் வெலிக்கடை, கண்டி போகம்பறை சிறைச்சாலை ஆகிய சிறைச்சாலைகளின் விளையாட்டு சாதனையாளர் என்ற விருதையும் சுவீகரித்துக்கொண்டுள்ளார். 2009 ஆம் ஆண்டின் தமிழ்சிங்கள புத்தாண்டு விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொண்டு 5000மீற்றர் ஓட்டப்போட்டியிலும் துவிச்சக்கரவண்டி ஓட்டப்போட்டியிலும் 1ஆம் இடத்தைப் பெற்றுள்ளார். 2010 ஆம் ஆண்டில் இலங்கையின் சிறந்த சாதனையாளர் என்ற விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன் கொழும்பில் நடைபெற்ற ”வண்ண இரவுகள் ” நிகழ்வில் ”ஏ” தர விளையாட்டு வீராங்கனை எனும் சான்றிதழையும் பெற்றுக்கொண்டார்.
  
2014ஆம் ஆண்டில் இரண்டு தடவை சிங்கபூரில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கத்தை வென்றார். 2014ஆம் ஆண்டு மாசி, பங்குனி, வைகாசி ஆகிய மாதங்களில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கு  கொண்டு தங்கப் பதங்கங்களையும் சிறந்த விளையாட்டு வீரங்கனைக்கான வெற்றிக்கிண்ணத்தையும் சாதனையும் நிலைநாட்டியுள்ளார்.
 
05:52, 4 மே 2021 இல் கடைசித் திருத்தம்

பெயர் அகிலத்திருநாயகி
தந்தை செல்லப்பா
தாய் சிவக்கொழுந்து அன்னமுத்து
பிறப்பு 1951.02.07
ஊர் முல்லைத்தீவு மாவட்டம், முள்ளியவளை, பளை
வகை விளையாட்டு வீராங்கனை

அகிலத்திருநாயகி, சிறிசெயானந்தபவன் முல்லைத்தீவு மாவட்டம், முள்ளியவளை பளையில் பிறந்த பெண்ஆளுமையாளர் . இவரது தந்தை செல்லப்பா, தாய் சிவக்கொழுந்து அன்னமுத்து. ஆரம்பக் கல்வியை முள்ளியவளை இந்துக்கலவன் பாடசாலையிலும் தொடர்ந்து முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரியிலும் கல்வி கற்றார். பாடசாலைக்காலத்திலேயே தடகளப்போட்டிகளில் கலந்துகொண்டு பாராட்டுக்களையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். விளையாட்டுத்துறையில் டிப்ளோமாவை ஜப்பானில் முடித்துள்ளார். சிறைத்துறைத் தொழிலிலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இவர் சிங்களமொழியிலும் தேர்ச்சி பெற்றார். இதனால் பதவி உயர்வையும் பெற்றார். தனது 31 வயதில் கணவரை இழந்த இவர் தனது இரு பிள்ளைகளையும் நல்ல பிஜைகளாக உருவாக்கியுள்ளார்.

விளையாட்டுத்துறையில் பிரகாசிக்க உதவிய முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்களையும் நன்றியுடன் நினைவு கூறுகிறார். இலங்கையில் மட்டுமல்லாது கடல் கடந்த நாடுகளான தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் விளையாட்டுத்துறை சார்ந்த தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். தனது 48 ஆவது வயதில் சிறைச்சாலைகளுக்கான விளையாட்டுப்போட்டி நடாத்தப்பட்டபோது சிறந்த வீராங்கனையாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 2008 ஆம் ஆண்டில் வெலிக்கடை, கண்டி போகம்பறை சிறைச்சாலை ஆகிய சிறைச்சாலைகளின் விளையாட்டு சாதனையாளர் என்ற விருதையும் சுவீகரித்துக்கொண்டுள்ளார். 2009 ஆம் ஆண்டின் தமிழ்சிங்கள புத்தாண்டு விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொண்டு 5000மீற்றர் ஓட்டப்போட்டியிலும் துவிச்சக்கரவண்டி ஓட்டப்போட்டியிலும் 1ஆம் இடத்தைப் பெற்றுள்ளார். 2010 ஆம் ஆண்டில் இலங்கையின் சிறந்த சாதனையாளர் என்ற விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன் கொழும்பில் நடைபெற்ற ”வண்ண இரவுகள் ” நிகழ்வில் ”ஏ” தர விளையாட்டு வீராங்கனை எனும் சான்றிதழையும் பெற்றுக்கொண்டார்.

2014ஆம் ஆண்டில் இரண்டு தடவை சிங்கபூரில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கத்தை வென்றார். 2014ஆம் ஆண்டு மாசி, பங்குனி, வைகாசி ஆகிய மாதங்களில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கு கொண்டு தங்கப் பதங்கங்களையும் சிறந்த விளையாட்டு வீரங்கனைக்கான வெற்றிக்கிண்ணத்தையும் சாதனையும் நிலைநாட்டியுள்ளார்.

2016, 2017, 2018, 2019, 2020ஆம் ஆண்டு கம்பளை, மாத்தறை ஆகிய இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் சிறந்த வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு வெற்றிக் கேடயத்தையும் பெற்றுள்ளார். 2020ஆம் ஆண்டு 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய சாதனையை நிலைநாட்டி சிறந்த வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

விருதுகள்

விளையாட்டு வீரமங்கை” என்று பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பு : மேற்படி பதிவு அகிலத்திருநாயகி, சிறிசெயானந்தபவன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வளங்கள்

  • நூலக எண்: 76279 பக்கங்கள் 45-47