ஆளுமை: நகுலேஸ்வரி ராகவன்

From நூலகம்
Name நகுலேஸ்வரி
Pages -
Pages -
Birth 1950.06.20
Pages 2006.11.16
Place திருநெல்வேலி
Category ஆசிரியை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


நகுலேஸ்வரி இராகவன் 1950.06.20 - 2006.11.16 திருநெல்வேலி என்னும் இடத்தில் பிறந்தார்.இவர் தனது ஆரம்பக்கல்வியில் இருந்து க.பொ.சாதாரண தரம் வரை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலும், பல்கலைக்கழக புகுமுக வகுப்பினை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும் கற்றவர். 1970 முதல் 1973 வரை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டதாரியானார். திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமா சான்றிதழ் தேர்ச்சியும் பெற்றவர்.14.07.1975ல் பேசாலை மகாவித்தியாலயத்தில் தமது ஆசிரியப் பணியினை ஆரம்பித்தார். மன்னார் புனித சவேரியாக ஆண்கள் பாடசாலையில் 1995ம் ஆண்டு வரை கடமையற்றினார். 1985முதல் 1993வரை யாழ்ப்பாணம் சென்ற் ஜேமஸ் பெண்கள் பாடசாலையிலும், 1994முதல் இறுதிவரை 17.12.2006) யாழ் இந்து மகளிர் கல்லுஸரியிலும் கடமை யாற்றினார். பாசம் பண்பு அடக்கம் அமைதி பொறுமை எடுத்துக் காட்டாக விளங்கிய ஆசிரியர் நல்லதொரு குருவிற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் மாணவரது ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கும் உறுதுணையாயிருந்து உழைத்தவர் வெளிவேஷயின்றி பாசங்காட்டும் பாங்கான தோழியாகவும், சகோதரியாகவும் ஆசிரிய உள்ளங்களில் நிறைந்திருந்தவர். தரமுடன் சமூகக்கல்விப் பாடத்தினைப் போதனை செய்து வந்த நம் ஆசிரியர் பாட இணைப்பாளராகவும், பழைய மாணவர் சங்க முன்னாள் பொருளாளராகவும் பொறுப்புடன் சேவையாற்றியவர். தூய நன்நடை இனிய சுபாவம் எளிமையாய் மாணவர் நலனில் அக்கறை, இவற்றுடன் இவர் கற்பித்த பாங்கிளை எண்ணிப் பார்க்கையில் பலரது நெஞ்சங்களை விட்டு அகலாது.