ஆளுமை:ஹிலரிபெஸ்டீனா, ரமேஸ்குமாரன்

From நூலகம்
Name ஹிலரிபெஸ்டீனா
Pages சூசைநாயகம்
Pages டொலரோஸ்
Birth 1988.01.25
Place மன்னார்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஹிலரிபெஸ்டீனா, ரமேஸ்குமாரன் (1988.01.25) மன்னாரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை எழுத்தாளர் சூசைநாயகம் (நாவன்னன்); தாய் டொலரோஸ். ஆரம்பக் கல்வியை முல்லைத்தீவு கலைமகள் வித்தியாலயம், மன்னார் அல்-அஸ்ஹர் மகாவித்தியாலயம் ஆகியவற்றில் கற்றார். சமூகசேவையில் ஈடுபாடுகொண்ட ஹிலரிபெஸ்டீனா மஹகரகம தேசிய கல்வி நிறுவனத்தில் விசேட தேவையுடையோருக்கான டிப்ளோமாவை முடித்துள்ளார். தனது பாடசாலைக் காலத்திலேயே எழுத்துத்துறைக்கு பிரவேசித்துள்ளார் ஹிலரிபெஸ்டீனா. இவரின் எழுத்துத்துறையின் பிரவேசத்திற்கு காரணமாக இருந்தது, கலைமகள் வித்தியாலயம் என்பதை நன்றியுடன் நினைவுகூருகிறார். World vision நிறுவனத்தில் சிறுவர்களுக்கான வளவாளராக தற்பொழுது கடமையாற்றி வருகிறார். கவிதை, அரங்கக் கவிதைகள், நாடகம் நடித்தல், பாடல்கள் எழுதுதல் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர் எழுத்தாளர். விழுதுகள் தாங்கும் விருட்சங்கள் கவிதைத் தொகுப்பை 2006ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளதோடு உயிரோடி எனும் கவிதைத் தொகுப்பையும் 2017ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். இவரின் ஆக்கங்கள் அமுதநதி சஞ்சிகையில் வெளிவந்துள்ளன.


குறிப்பு : மேற்படி பதிவு ஹிலரிபெஸ்டீனா, ரமேஸ்குமாரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.