ஆளுமை:ஹரீஸா, சமீம் அப்துல் ஜப்பார்

From நூலகம்
Name ஹரீஸா
Pages முஹைதீன் அப்துல் காதர்
Pages ஹவ்லத்
Birth 1980.09.06
Place மருதமுனை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஹரீஸா, சமீம் அப்துல் ஜப்பார் (1980.09.06) அம்பாறை, மருதமுனையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை முஹைதீன் அப்துல் காதர்; தாய் ஹவ்லத். மருதமுனை ஹரீஸா எனும் புனைபெயரில் அறியப்படுகிறார். தனது கல்வியை மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியில் கற்றார். தென்கிழக்குப்பல்கலைக்கழத்தில் இதழியல் டிப்ளோமா பாடநெறியையும், இலங்கை நூலகச் சங்கத்தினால் நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் நூலகவியல் டிப்ளோமாவையும் இவர் பூர்த்தி செய்துள்ளார். தற்போது இவர் மருதமுனையில் நூலகராக கடமைபுரிந்து வருகிறார். 1999ஆம் ஆண்டு எழுத்துலகில் பிரவேசித்துள்ளார் எழுத்தாளர். கவிதை, சிறுகதை, கட்டுரை விமர்சனம் என பன்முகத் திறமைகளைக் கொண்ட எழுத்தாளரின் ஆக்கங்கள் வீரகேசரி, தினக்குரல், தினகரன் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளதுடன் சக்தி எவ்.எம், பிறை எவ்.எம், ஊவா சமூக வானொலி, அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலண்டன் முஸ்லிம் குரல் வானொலி போன்றவற்றிலும் ஹரீஸாவின் ஆக்கங்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளன. இவரின் முதலாவது கவிதைத் தொகுப்பு உன் மொழியில் தழைக்கிறேன் என்ற தலைப்பில் 2017ஆம் ஆண்டு வெளியாகியது. இவரின் ஆக்கங்கள் பல சுனாமி பேரலையினால் அழிவுற்றுள்ளது. இவரின் தந்தையும் கணவரும் ஊடகவியலாளர்களாக இருப்பதனால் இவரின் இலக்கியப் பயணத்திற்கு துணையாக இருக்கிறதென்கின்றார். ஒரு சொட்டும் மிச்சம் வைக்காமல்…. என்ற இவரின் மற்றுமொரு கவிதைத் தொகுதியும் வெளிவரவுள்ளதோடு ஊமச்சி என்ற தலைப்பில் இவரின் முதலாவது நூல் ஒன்றும் வெகுவிரைவில் வெளிவரவுள்ளது.

படைப்புகள்

  • உன் மொழியில் தழைக்கிறேன் (கவிதைத் தொகுதி)

வெளி இணைப்புக்கள்