ஆளுமை:வைத்திலிங்கம், அ.

From நூலகம்
Name வைத்திலிங்கம்
Birth 1915
Place
Category அரசியல்வாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வைத்திலிங்கம், அ (1915 - ) ஓர் அரசியல்வாதி. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வியை முடித்த இவர், கம்யூனிஸ்ட் உழைப்பாளிகள் ஸ்தாபனத்தைக் கட்டியெழுப்புவதில் தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார். அக்காலத்தில் நாட்டிலிருந்த ஒரே ஒரு அரசியற் கட்சியும் இடதுசாரிக் கட்சியுமான லங்கா சமசமாயக் கட்சியில் சேர்ந்து சிறிது காலம் பணியாற்றிப் பின்னர் அமரர் டாக்டர் எஸ்.ஏ.விக்ரமசிங்க, வண.யு. சரணங்க மற்றும் பலருடன் சேர்ந்து ஐக்கிய சோசலிசக் கட்சியை ஆரம்பித்தார். இதுவே பின்னர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு முன்னோடியாக அமைந்தது.

பல ஆண்டு காலம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கணித ஆசிரியராகப் பணியாற்றியுள்ள இவர், பிற்காலத்தில் உரும்பராய் இந்துக் கல்லூரியின் அதிபராகவும் வடமாகாண ஆசிரிய சங்கத்தின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 4293 பக்கங்கள் 131-134