ஆளுமை:வேல்மாறன், சதாசிவம்

From நூலகம்
Name வேல்மாறன்
Pages சதாசிவம்
Birth 1966.06.18
Place வண்ணார்பண்ணை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேல்மாறன், சதாசிவம் (1966.06.18 - ) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை சதாசிவம். தனது பத்தாவது வயதிலிருந்து தந்தையிடம் மிருதங்க இசையைப் பயின்று பின்னர் நாச்சிமார் கோவிலடி வே. அம்பலவாணர், சங்கீத இரத்தினம் சி. மகேந்திரன், சங்கீத இரத்தினம் ம. சிதம்பரநாதன், மிருதங்க வித்துவான் அளவையூர் ஐ. சிவபாதபிள்ளை ஆகியோரிடம் மிருதங்க வாத்திய இசையையும் அதன் நுணுக்கங்களையும் முறையாகக் கற்றுத் தேர்ந்தார்.

இவர் வட இலங்கை சங்கீத சபைத் தேர்வில் ஆசிரியர் தரம் ஆறில் சித்தியடைந்து கலாவித்தகர் பட்டம் பெற்றுக் கொண்டார். இவர் 1989 ஆம் ஆண்டு நல்லை ஆதீன மண்டபத்தில் சங்கீத வித்துவான் இராமநாதன், வி. எஸ். சீனிவாசன் ஆகியோருடன் இணைந்து தனது மிருதங்க அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். நோர்வே, பிரான்ஸ், ஜேர்மனி, டென்மார்க், கொலண்ட், சுவிஸ் ஆகிய நாடுகளில் தன் ஆற்றலை வெளிப்படுத்தியிருக்கும் இவர், யாழ்ப்பாணத்தில் பல சமூக சேவை நிறுவனங்களாலும் ஆலயங்கலாலும் அரச கல்லூரி அமைப்புக்களாலும் பொன்னாடை போர்த்தியும் பட்டங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 138
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 107