ஆளுமை:வேலன், சின்னத்தம்பிபோடியார்

From நூலகம்
Name வேலன்
Pages சின்னத்தம்பிபோடியார்
Pages கெங்காத்தை
Birth 1804
Pages 1880
Place அக்கரைப்பற்று
Category கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலன், சின்னத்தம்பிபோடியார் (1804 - 1880) மட்டக்களப்பு, அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவரது தந்தை சின்னத்தம்பிபோடியார்; தாய் கெங்காத்தை. இவர் பனை ஓலையிலான தொப்பி அணிந்திருந்தமையால் மகிட வேலாப்போடி என்று அழைக்கப்பட்டார்.

இவர் திண்ணைப்பள்ளிக்கூடக் கல்வியுடன் செவிக்கல்வி மூலம் பள்ளு, ஊஞ்சல், காவியம், அம்மானை என்பவற்றைக் கேட்டறிந்த ஞானத்தால் உந்தப்பட்டுக் கவி புனைவதில் திறமை பெற்று ஊஞ்சற் கவிகளையும் வசைப்பாடல்களையும் ஆக்கியுள்ளார். இவரால் நகைச்சுவை மிகுந்த சிலேடைப் பாடல்களும் பள்ளுப் பாடல்களும் பாடப்பட்டுள்ளன. இவர் தம்பிலுவிற் பள்ளு, திருக்கோயில் ஊஞ்சல் போன்ற நூல்களை இயற்றினார்.

Resources

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 42
  • நூலக எண்: 963 பக்கங்கள் 207-208
  • நூலக எண்: 11601 பக்கங்கள் 144-148