ஆளுமை:வேற்பிள்ளை, கணபதிப்பிள்ளை

From நூலகம்
Name வேற்பிள்ளை
Pages கணபதிப்பிள்ளை
Birth 1847.01.08
Pages 1930.02.17
Place மட்டுவில்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேற்பிள்ளை, கணபதிப்பிள்ளை (1847.01.08 - 1930.02.17) யாழ்ப்பாணம், மட்டுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. இவரை உரையாசிரியர் ம.க. வேற்பிள்ளை என்று குறிப்பிடுவர். இவர் இளமையில் மட்டுவில் சண்முகலிங்கம்பிள்ளை ஆசிரியரிடம் நீதி நூல்களையும் இலக்கண நூல்களையும் நிகண்டுகளையும் கற்றார். ஆறுமுகநாவலர் சென்னை சென்ற போது அவருடன் சேர்ந்து தானும் சென்று அவரிடம் கல்வி கற்றார். இலக்கண இலக்கியங்களைக் கற்றதுடன் கவி இயற்றும் வல்லமை படைத்தவர். சிதம்பரத்திலுள்ள நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையின் தலைமை ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

திருவாதவூர் புராண விருத்தி உரை, புலியூரந்தாதியுரை, கௌரி நூல் விளக்க உரை, அபிராமி அந்தாதி உரை, ஈழ மண்டலச்சதகம், புலோலிப் பர்வதவர்த்தினியம்மை தோத்திரம், புலோலி வைரவக் கடவுள் தோத்திரம், வைரவ ஸ்தோத்திர மாலை, ஆருயிர் கண்மணி மாலை போன்றன இவரது நூல்கள். ஈழ மண்டலச்சதகம் நூல் இவர் இந்தியாவிலிருந்த காலத்தில் ஈழ மண்டலத்தின் பெருமையறியாது இகழ்ந்தோருக்கு அதன் பெருமையை அறிவிக்கும்படி இயற்றப்பட்டது. வேதாரணிய புராணம், சிதம்பரச் சிவகாமியம்மை சதகம் ஆகியன இவர் பரிசோதித்து அச்சிட்ட நூல்கள்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 90-94
  • நூலக எண்: 963 பக்கங்கள் 209-210
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 16-18