ஆளுமை:வேதநாயகாம்பாள், இலங்காதிலகம்

From நூலகம்
Name வேதநாயகாம்பாள், இலங்காதிலகம்
Pages நகுலேசுவரர்
Pages சிவக்கொழுந்து
Birth 1947.04.03
Place கோப்பாய்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேதநாயகாம்பாள், இலங்காதிலகம் (1947.04.03 - ) யாழ்ப்பாணம், கோப்பாயைப் பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை நகுலேசுவரர்; தாய் சிவக்கொழுந்து. இவர் யாழ்ப்பாணம் கோப்பாய் நாவலர் மத்திய மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் கனகரட்ணம் மகா வித்தியாலயம், கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். இவர் டென்மார்க்கில் டேனிய மொழியைக் கற்று பாலர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.

இவரது முதலாவது கவிதையான 'பெற்றவரின் பெரும் கனவு' 1976 இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வர்த்தக சேவையான பூவும் மொட்டும் மங்கையர் மஞ்சரியில் ஒலிபரப்பாகியது. தொடர்ந்து நகுலேஸ்வரி, நகுலவேணி, வேதா, இலங்காதிலகம் என்னும் புனைபெயர்களில் 400 இற்கும் மேற்பட்ட கவிதைகள், 100 இற்கும் மேற்பட்ட கட்டுரைகள், 3 சிறுசஞ்சிகைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் இந்திய, ஜேர்மனிய, டென்மார்க், ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் வெளிவரும் சஞ்சிகைகளும், முத்துக்கமலம், Pathivukal.Com இணையத்தள இதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் இடம்பெற்றுள்ளன. பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் தொலைக்காட்சிச் சேவையில் இவரது கவிதைகள் இவரால் நேரடியாக வாசிக்கப்படுகின்றன.

வேதாவின் கவிதைகள் - (2003), குழந்தைகள் இளையோர் சிறக்க... - மொழிபெயர்ப்புக் கட்டுரை நூல் (2004), உணர்வுப் பூக்கள் - வாழ்வியல் கவிதைகள் (2007) ஆகியன இவரது நூல்கள்.

Resources

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 46-51

வெளி இணைப்புக்கள்