ஆளுமை:வெற்றிவேல், கணபதிப்பிள்ளை

From நூலகம்
Name வெற்றிவேல்
Pages கணபதிப்பிள்ளை
Birth 1952.09.02
Place திருகோணமலை
Category கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வெற்றிவேல், கணபதிப்பிள்ளை (1952.09.02 - ) திருகோணமலை, கிளிவெட்டியைச் சேர்ந்த ஒரு ஆசிரியர், அதிபர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. ஆசிரியர் பொதுப்பயிற்சி நெறியையும் கலைமாணிப்பட்டத்தையும் பட்டப்பின் டிப்ளோமாக் கல்வியையும் கற்ற இவர், ஆசிரியராகவும் அதிபராகவும் கிளிவெட்டி தொழிற்கல்வி சிரேட்ட போதனாசிரியராகவும் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் கோட்டக்கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் கிளிவெட்டி பாரதிபுரம் அருள்மிகு நாகலிங்கேஸ்வரர் சிவன் ஆலய பரிபாலன சபைத் தலைவராகவும் கொட்டியாரப்பற்று இந்து சமய அபிவிருத்தி ஒன்றியத் தலைவராகவும் விளங்கி சைவ சமயப் பணிகளைச் செய்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 17049 பக்கங்கள் 49