ஆளுமை:வீரசொக்கன், வீரபத்திரன்

From நூலகம்
Name வீரசொக்கன்
Pages வீரபத்திரன்
Pages முத்துராக்காய்
Birth 1953.07.09
Place புத்தளம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வீரசொக்கன், வீரபத்திரன் (1953.07.09 - ) புத்தளம், உடப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை வீரபத்திரன்; தாய் முத்துராக்காய். உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர், முந்தல் - பிரதேச செயலகத்தில் எழுதுவினைஞராகப் பணியாற்றியுள்ளார். இவர் உடப்பூர் வீரசொக்கன், உடப்பூரான், அலைமுகிலன் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகின்றார். இவரது முதலாவது ஆக்கமான ‘முத்தலச் சிறப்புப் பெற்ற முன்னேஸ்வரம்' வீரகேசரி பத்திரிகையில் 1977ஆம் ஆண்டு வெளியானதிலிருந்து 20 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் 300 இற்கும் மேற்பட்ட கவிதைகளையும் 500 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இவர் உடப்பு ஸ்ரீ திரௌபதையம்மன் (பார்த்தசாரதி) ஆலய வரலாறு, கங்கை நீர் வற்றவில்லை, அலைகடல் ஓரத்தில் தமிழ் மணம், வீராவின் கதம்ப மாலை, கீர்த்திமிகு உடப்பு ஸ்ரீ திரௌபதையம்மன் - முதலாம் பதிப்பு, முண்டத்துண்டு ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவர் கலை இளவல், கீர்த்திபாதிய, தேச கீர்த்தி, தமிழ் மணி, கலைதீபம் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 1857 பக்கங்கள் 75-80
  • நூலக எண்: 15216 பக்கங்கள் 03-06