ஆளுமை:வீரசிங்கம், நாகமணி

From நூலகம்
Name வீரசிங்கம்
Pages நாகமணி
Pages ஆச்சிமுத்து
Birth 1938.07.02
Place வேலணை
Category தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வீரசிங்கம், நாகமணி (1938.07.02 - ) வேலணை, சோளாவத்தையைப் பிறப்பிடமாகக் கொண்ட தொழிலதிபர், தமிழ்மொழிப் பற்றாளர், நாட்டுப்பற்றாளர், பகுத்தறிவுச் சிந்தனையாளர், வள்ளலார். இவரது தந்தை நாகமணி; தாய் ஆச்சிமுத்து.

இவர் ஆரம்பத்தில் சாதாரண கடை லிகிதராகத் தொழிலை ஆரம்பித்துப் பின்னர் பிறவுன்சன் இன்டஸ் ரீஸ் என்ற தொழில் நிறுவனத்தை உருவாக்கும் அளவு வளர்ந்ததுடன் தனித் தமிழ் இயக்கச் செயற்பாடுகளுடன் ஈடுபாடு நிறைந்தவராவார். திருவாளர்கள் எஸ்.பி.சாமி. பொன் தியாகராசா போன்றோருடன் இணைந்து வேலணை வாலிபர் முன்னேற்றச் சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் தமிழ் விழாக்கள், இலக்கிய விழாக்களை நடத்தியதோடு, 1964 இல் தாய் நாடு என்ற மாதச்சஞ்சிகையை வெளியிட்டு யாழ்தாசன் என்ற புனைபெயரில் ஆக்கங்களைப் படைத்து வந்தார்.

யாழ் கலையரங்கம் கலைக் கழகத்தை உருவாக்கி அதன் செயலாளராகச் செயற்பட்ட இவர், இக்கலையரங்கின் மூலம் கலைஞரின் நச்சுக்கோப்பை, நடமாடியின் சங்கிலியன் போன்ற பல நாடகங்களை மேடையேற்றிக் கலைஞர்களை ஊக்குவித்தார். தமிழ்ச்சங்கப் பணிகளுக்கு உதவிகள் செய்து வரும் இவர், தமிழ்ச் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 462-466