ஆளுமை:வித்தியானந்தன், சுப்பிரமணியம்

From நூலகம்
Name வித்தியானந்தன்
Pages சுப்பிரமணியம்
Pages முத்தம்மா
Birth 1924.05.08
Pages 1989.01.21
Place தெல்லிப்பளை
Category எழுத்தாளர், கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வித்தியானந்தன், சுப்பிரமணியம் (1924.05.08 - 1989.01.21) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சுப்பிரமணியம்; தாய் முத்தம்மா. இவர் வீமன்காமம் தமிழ்ப் பாடசாலையில் தொடக்கக் கல்வியையும் பின்னர் தெல்லிப்பளை ஒன்றியக் கல்லூரி, பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, இலங்கைப் பல்கலைக்கழகம், இலண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்றுத் தேர்ந்தார். இவர் இலங்கைப் பல்கலைக்கழக்தில் சுவாமி விபுலானந்த அடிகள், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை ஆகியோரிடம் கற்றுத் தேர்ந்தார். இங்கு தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்றுக் கலைமாணி, முதுகலைமாணி ஆகிய பட்டங்களையும் இலண்டனில் முனைவர் பட்டமும் பெற்றார். இவர் 1977 இல் யாழ்ப்பாண வளாகத்தின் தலைவராகவும் அதன் பின்னர் ஜனவரி 1979 இல் அவ்வளாகம் பல்கலைக்கழகமான போது அதன் முதலாவது துணைவேந்தராகவும் கடமையாற்றினார்.

இவர் ஈழத்தமிழ்த் தேசியத்தின் அடியாதாரமாக அமையத்தக்க நாட்டார் இலக்கியத்தையும் நாட்டுப்புறக் கலையையும் தேடித்தொகுத்துத் தேசியப் பண்பு சார்ந்து வடிவப்படுத்தினார். இவரது நினைவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகம் "பேராசிரியர் சு.வித்தியானந்தன் நூலகம்' என்று பெயரிடப்பட்டது.


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 284 பக்கங்கள் 01-50
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 49
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 04-06
  • நூலக எண்: 16357 பக்கங்கள் 250-256
  • நூலக எண்: 955 பக்கங்கள் 58-64
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 28-31